தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 44,094 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 56.28% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 3வது நாளாக உச்சத்தை தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 78,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 78,355 ஆக உயர்ந்துள்ளது. […]
