மிருகக்காட்சிசாலையில் அயர்ந்து தூங்கும் குட்டி யானையை அதன் தாய் தட்டியெழுப்பும் அழகிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. செக் குடியரசு நாட்டில் பிராக் என்னும் மிருகக்காட்சிச்சாலை அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையில் 47 நொடிகளுக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் குட்டி யானையானது தரையில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை கண்ட தாய் யானை தனது குட்டியை தும்பிக்கையினால் எழுப்ப முயற்சிக்கிறது. […]
