குட்கா பொருட்கள் பதுக்கி வைத்த 4 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் மாநகர காவல் துறையினருக்கு ஒரு சில கடைகளில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் பரத்சிங் என்பவரக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தியபோது குட்கா பொருட்கள் பதுக்கி […]
