பஞ்சு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரம் பல பாளையம் பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பஞ்சு குடோனை மங்கலம் பகுதியில் வசிக்கும் ஜெய்வுலாதீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் குடோனில் யாரும் வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சற்று நேரத்தில் குடோன் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. […]
