குழந்தைகள் தாத்தா- பாட்டியின் பாதுகாப்பில் வளர்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் தான் நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும். இந்நிலையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை வீட்டில் இருக்கும் தாத்தா,பாட்டி பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். எனவே குழந்தைகள் சரியான நேரத்துக்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். […]
