மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே அதிமுக கட்சியின் சார்பில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் நோக்கத்தில் திமுக செயல் பட்டு கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தான் தற்போது திமுக ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது. […]
