நிவாரணம் தொகையை பெறுவதற்காக புதிதாக குடும்ப அட்டை வாங்க பொதுமக்கள் அலை மோதியதால் குன்றத்தூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் புதிய ஐந்து திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2000 ரூபாய் முதற்கட்டமாக வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அந்தத் திட்டத்தின் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து குன்றத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக குடும்ப அட்டை பதிவு […]
