தமிழகத்தில் மழையால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. […]
