கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு 10 நாட்களுக்குள் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக […]
