விரைவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் நடைபெற்ற சமூக கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கோர்க்காக்கள், தலித்கள் உட்பட அனைத்துப் பிரிவினரிடமும் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பலன்களை நீங்கள் அனைவரும் பெறுவீர்கள் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் அதற்கு மிகவும் கடுமை கடமைப்பட்டுள்ளோம். கொரோனா தொற்றினால் இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கு தாமதமானது. ஆனால் தற்போது தொற்றின் தாக்கம் […]
