பேருந்தை நிறுத்தி குடிபோதையில் இரண்டு நபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிது தூரம் சென்றபோது 40 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர். மேலும் பேருந்தை நிறுத்திய ஓட்டுனரிடம் குடிபோதையில் இரண்டு நபர்களும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நபர்கள் பெண்களைப் போலவே எங்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென வாக்குவாதம் செய்துள்ளனர். இதனைப் […]
