தண்ணீர் பற்றாக்குறையை போக்குமாறு காலி குடங்களுடன் பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஊன்கால்புளியங்குளம் என்ற கிராமத்தில் சரியாக குடிநீர் விநியோகிக்கபடாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலை தொடர்வதால் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட […]
