திருச்சியில் அனுமதி இன்றி இயங்கி வந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருச்சியில் பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஸ்ரீரங்கம், திருவரம்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 23 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் […]
