குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் இருக்கும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதேபோல் சமாதானபுரம் மகளிர் காவல் நிலையம் பகுதியில் இருக்கும் குழாயிலும் உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. […]
