நீலகிரியில் பழுதான அனைத்து குடிநீர் ஏ.டி.எம் இயந்திரங்களை ஒரு வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் ஏ.டி.எம் இயந்திரங்களை உடனடியாக செயல்முறைக்கு கொண்டு வருவது குறித்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கிடையே ஆலோசனைக்கூட்டம் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் எஸ்.பி அம்ரித் தலைமை தாங்க, மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி நகராட்சி ஆணையாளர், காந்திராஜ், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், […]
