மயிலாடுதுறையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் முகநூலில் பரவி வருதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் பெரியார் சிலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பெரியார் சிலைக்கு காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கூண்டு அமைத்துள்ளனர். இதையடுத்து நேற்று அந்த பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து யாரோ சிலர் சிலையை அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
