விஜய்யும், துல்கர் சல்மானும் தனக்கு பிடித்த நடிகர்கள் என சிவாங்கி தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது சிவாங்கிக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதன்படி சிவகார்த்திகேயனின் டான் படத்தில் சிவாங்கி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிவாங்கி பங்கேற்றுள்ளார். […]
