நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் இருந்த பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்டது கீழ்வேளூர் தனித்தொகுதி. 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் போது இத்தொகுதி உதயமானது. விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகிய தொழில்கள் இங்கு பிரதானமாக உள்ளன. கிராம பகுதிகளை அதிக அளவில் கொண்ட தொகுதியாக கீழ்வேளூர் உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த திருப்புகழை கீழ்வேளூர் தொகுதியில் தான் உள்ளது. கிறிஸ்தவர்களின் புகழ் பெற்ற தலமான வேளாங்கண்ணி மாதா ஆலயம் இங்குதான்அமைந்துள்ளது. […]
