காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன், ஷாலினி தம்பதி. இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா பக்கத்துவீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் சுடச்சுடப் பலகாரம் சுட்டு விட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் குழந்தை தவறி விழுந்துள்ளது. இதில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். […]
