சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ‘ட்ரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துள்ளார். இதில் மருத்துவமனையின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து […]
