கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பாக்யராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணை தலைவர் சண்முகம் மற்றும் மாவட்ட செயலாளரான செல்வம் போன்றோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் ஒன்பது ஊராட்சிகளில் கொரோனா காலகட்டத்தில் 100 நாட்கள் வேலை திட்டம் […]
