சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்போது ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்பின் அகரத்திலும், கொந்தகையிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2 குழிகள் தோண்டப்பட்ட போது சிறிய, பெரிய நத்தை கூடுகள், மண்பாண்ட ஓடுகள், சேதமடைந்த பானைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மனித மண்டை […]
