சாதாரண உடையில் சென்ற டெல்லி போலீசாரை உள்ளூர் காவல்துறையினர் பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏமன் நாட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் மணிகண்டன் போலி விசாவில் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஏமன் நாட்டு காவல்துறையினர் மணிகண்டனை 5 நாட்கள் காவலில் வைத்து மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு […]
