மாணவச் செல்வங்கள் யாரும் அவசரப்பட்டு தகாத முடிவுகளை எடுக்க வேண்டாம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் நம்மால் வெற்றி பெற இயலாது என்ற விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு காலங்களில் இதுவரை இந்த வாரத்தில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது நம் மனம் கலங்க வைக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் […]
