சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலா கலந்து கொண்டார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றவர்களுக்கு புத்தாடை மற்றும் கேக் உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, நான் யார் பக்கமும் இல்லை. நான் அனைவருக்கும் பொதுவான நபராக தான் செயல்படுகிறேன். நான் இருக்கும் வரை அ.தி.மு.க தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். மேலும் அ.தி.மு.க-வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன். […]
