ஈரானில் இருந்து கிவி பழங்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்த கிவி பழங்களில் பூச்சிகள் அதிகமாக இருந்ததால் இறக்குமதியை இந்தியா நிறுத்திக்கொண்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பலமுறை பழங்களில் பூச்சிகள் இருப்பது குறித்து எச்சரித்தும் இது தொடர்கதையாக இருந்ததால் இறக்குமதி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய பாதுகாப்பு அமைப்பு (NPPO) அமல்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் NPPO, கிவி […]
