நேட்டோ அமைப்பில் சேர்ந்து உக்ரைன் பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷ்யாவுக்கு, உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி போர் தொடுத்தது. முதலில் உக்ரைன் நாட்டில் ராணுவ கட்டமைப்புகளை தாக்குவதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு தாக்குதல் தொடுப்பதாகக் கூறிய ரஷ்யா பின்னர் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள் என தனது தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. […]
