கொரோனா பரவல் காரணமாக கிளைச் சிறையில் இருந்து 14 கைதிகள் திருச்சி மத்திய சிறை சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டான் பகுதியில் கிளை சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த கிளைச் சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் அந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டசில கைதிகளை மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற […]
