வேலை பார்த்துக் கொண்டிருந்த போது லாரி கிளீனர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் அரிசி ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணன் எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
