செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் கடற்கரை சாலை அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களிலிருந்து பிடித்து வரப்பட்ட பச்சை கிளிகளின் இறக்கைகளை வெட்டி மரகூண்டுகளில் அடைத்து கிளி ஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாக வனத்துறைக்கு புகார்கள் பெறப்பட்டது. இதனையடுத்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் தலைமையில் வனக்காவலர்கள் பிரகாசம், சரவண குமார், பெருமாள், கணேஷ்குமார் போன்ற வனத்துறை அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடற்கரை பகுதி, அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் […]
