சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]
