சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டதுடன் 160 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியது. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் 2003ஆம் ஆண்டிலிருந்து டர்பர் மாகாணத்தை மையமாகக்கொண்டு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைதி ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த […]
