மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் பண்ணவாடி நீர்தேக்க பகுதியில் இருந்த கிறிஸ்தவ கோபுரம் மீண்டும் தண்ணீரில் மூழ்கி விட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு அதன் நீர்த்தேக்க பகுதிகளில் பண்ணவாடி, கோட்டையூர், காவேரிபுரம், புதுவேலமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்கள் இருந்தது. இதனையடுத்து அணையின் கட்டுமான பணிகள் தொடங்கியபிறகு கிராமத்தில் இருந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி பல இடங்களில் குடி புகுந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் வழிபட்ட ஜலகண்டேஸ்வரர் ஆலயம்,நந்தி சிலை,ராஜா கோட்டை,கிறிஸ்துவ கோபுரம் போன்ற […]
