பயணங்களுக்கு உதவக்கூடிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். HDFC வங்கி HDFC Regalia கிரெடிட்கார்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல் உடன் வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவிலுள்ள 12 ஓய்வறைகள் மற்றும் வெளிநாட்டிலுள்ள 6 ஓய்வறைகள் ஒவ்வொரு காலண்டர் ஆண்டும் கிடைக்கும். சில்லறை விற்பனையில் செலவிடப்படும் ரூ.150க்கு நான்கு வெகுமதி புள்ளிகளை அளிக்கிறது. இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.2,500 ஆகும். வருடத்துக்கு ரூபாய்.3 லட்சம் செலவழித்தால் புதுப்பித்தல் கட்டணமானது தள்ளுபடி செய்யப்படுகிறது. […]
