கோயம்புத்தூரில் கிருஷ்ணர் சிலை ஒன்றை மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை அருகே அமைந்துள்ள பாரதி பூங்கா வளாகத்தில் கிருஷ்ணர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் கிருஷ்ணரின் முழங்காலுக்கு மேல் உள்ள பாகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடந்ததாக ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் […]
