கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான வசந்தாவை குடும்பத்தினர் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அன்றைய தினம் வசந்தாவுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் டாக்டர் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் தெரிவிக்காமல் ஓசூர் அரசு […]
