திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 அரசுப் பேருந்துகள் கிருமி நாசினி தெளித்து பராமரிப்பு பணிகளுடன் இயக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில தளர்வுளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியிலிருந்து திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய பணிமனைகளில் இருந்து புறநகர் பேருந்துகள், வேலூர், சென்னை, தாம்பரம்போன்ற பல்வேறு பகுதிகளுக்கு 50 சதவீத பயணிகளுடன் 60 பேருந்துகள் இயக்கப்பட்டது. […]
