பாகுபலி திரைப்படம் வாயிலாக இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவருடைய திரைப்படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கின்றனர். இதன் காரணமாக அவர் சம்பளத்தை ரூபாய்.100 கோடியாக உயர்த்திவிட்டார். இதற்கிடையில் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக முன்னதாக தகவல் பரவியது. எனினும் காதலிப்பதை இரண்டு பேருமே உறுதிப்படுத்தவில்லை. இப்போது இந்தி நடிகையான கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புது தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணையதளங்களில் பரவி வருகிறது. […]
