Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: ஓய்வை அறிவித்தார் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர்….!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார்.  இவர்  நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக  அனைத்து வகையான பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வந்தார். இவர் ஜனவரி 2019இல் ஒருநாள் போட்டிகளில் தனது 20வது நூறைப் பெற்றதன் மூலம் எந்தவொரு போட்டி வகைகளிலும் 20 நூறுகள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் ஆனார். இந்நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: பிரபல (CSK) இந்திய கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹர்பஜன் இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக சிஎஸ்கே அணியில் ஆடியபோது தமிழில் டுவீட் செய்து தமிழக மக்களைக் கவர்ந்தார். இந்நிலையில் எனது 23 ஆண்டுகால பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: மே.தீவுகள் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா…. ஐசிசி அறிவிப்பு…!!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ், ஷெல்டான் காட்ரெல் ஆகிய 3 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

JUST IN: ஒமைக்ரான்…. BCCI பரபரப்பு அறிவிப்பு…!!!!

தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க இருந்த மூன்றாவது டெஸ்ட், 3 ODI மற்றும் 4 டி-20 தொடர்  ஒத்திவைக்கப்படும் என்று தொடர்ந்து செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி நேரத்தில் கைக்கொடுக்காத சுழற்பந்து…. டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி….!!!!

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தன்னுடைய முதல் இன்னிங்சில் 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் எடுத்தன. இதனை தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 234 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணி 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய இறுதி நாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL: CSK அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் இவர்தான்…. மாஸ் அறிவிப்பு…..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த 14வது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி 4-வது முறையாக கைப்பற்றியது. இதையடுத்து தோனி விளையாடுவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தோனி நிச்சயமாக அடுத்த ஆண்டு முதல் அணியில் தக்க வைக்கப் படுவது மட்டுமின்றி கேப்டனாகவும் நீடிப்பார் என ஏற்கனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படும் 4 வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: CSK அணியில் இருந்து…. சற்றுமுன் தோனி அறிவிப்பு…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்எஸ் தோனி, எனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகள் கழித்து இருந்தாலும் சென்னையில் தான் கடைசி டி20 போட்டி. எங்கு ஐபிஎல் நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தனர். சென்னையும், தமிழ்நாடும்  எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

JUST IN: தோல்வியில் தான் நாங்கள் கற்று கொண்டோம்…. தோனி…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும், எம்.எஸ் தோனி தமிழகம் வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வர் முக ஸ்டாலினிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று பதிலடி கொடுக்கணும்…! பழிதீர்க்கபோகும் இந்தியா… மாஸ் வெயிட்டிங்கில் ரசிகர்கள் …!!

இந்தியா நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு மான்சிங் இன்டோர் மைதானத்தில் நடைபெற உள்ளது. டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணி புதிய பயிற்சியாளர் ராகுல் ராபர்ட் தலைமையில் நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 இல்லை…. 1 தான்…. “ரூ 5 கோடி இல்ல, 1.5 கோடி தான்”….. மறுக்கும் ஹர்திக் பாண்டியா!!

2 கைக் கடிகாரங்கள் இல்லை, 1.5 கோடி மதிப்புள்ள ஒரு கைக்கடிகாரம் தான் பறிமுதல் செய்யப்பட்டது என்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து விட்டது.. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையையும்  கைப்பற்றி விட்டது.. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.. இந்த தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சி விலகல்: விராட் கோலி, ரவி சாஸ்திரி…. இந்திய அணியில் பரபரப்பு….!!!!

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு அணியில் வீரர்கள் தேர்வு தான் காரணம் என பலரும் விமர்சித்தனர். அந்த போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்த நிலையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த ரவிசாஸ்திரி,விராட் கோலி ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும் விலகலாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICU- வில் 2 நாட்கள்-அடுத்த நாள் பேட்டிங்…. நெகிழும் ரசிகர்கள்……!!!!!

உலக கோப்பை அரை இறுதியில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை தனது பேட்டிங் திறமையால் திணறடித்த பாகிஸ்தான் வீரர் முஹம்மது ரிஸ்வான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிபிஎஸ் லக்ஷ்மன் பாராட்டியுள்ளார். துபாயில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி டி 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள், 67 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்திய டி20 அணி புதிய கேப்டன்…. BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்த பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரையிறுதிக்கு செல்லுமா ஆஸ்திரேலியா? காத்திருக்கும் ரசிகர்கள்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியுற்றது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு 70 விழுக்காடு உறுதியானது. சார்ஜா மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் குவித்தது. […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்கள் ஆட்சியில் முதல் முறை!”.. காபூலில் நடந்த கால்பந்து தொடர்.. ரசிகர்கள் உற்சாகம்..!!

தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல் தடவையாக காபூல் நகரில் கால்பந்து போட்டி நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் நடைபெறவிருந்த ஒரு டெஸ்ட் போட்டியையும் ரத்து செய்துவிட்டது. அதே சமயத்தில், காபூல் நகரில் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றுள்ளது. அதாவது, மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தலிபான் அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம், வரும் 27ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற இருந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை ரத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING: இந்திய கிரிக்கெட் அணி புதிய பயிற்சியாளர் – BCCI அறிவிப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி செயல்ப்பட்டு வந்த நிலையில் அவருக்கான காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது. 🚨 NEWS 🚨: Mr Rahul Dravid appointed as Head Coach – Team India (Senior Men) More Details 🔽 — BCCI (@BCCI) November 3, 2021  

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் இந்தியா பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதும் – சக்லைன் முஷ்டாக்

இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை இறுதிப் போட்டியில் விளையாடும் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் என சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் இந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் அதாவது இறுதி போட்டியில் சந்தித்தால் மகிழ்ச்சி அடைவேன் என கூறினார். மீண்டும் ஒருமுறை விளையாடும் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சவாலாக இருக்கும்…! வெயிட் பண்ணுறேன்… ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் பாராட்டு ..!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி எப்போதும் சவாலாக இருக்கும் என்றும், அடுத்து அணியுடன் மோதுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர் இலங்கை அணி தொடக்கத்தில் ரன் குவித்தது என்றும், அதன்பின் ஆடம் ஜாம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசினார் எனவும் கூறினார். ஆடம் ஜம்பாவிற்கு நாள் அற்புதமாக அமைந்தது. இலங்கையில் பவர்ப்ளே ஆட்டம் சிறப்பாக இருந்த நிலையில் ஆடம் ஜம்பா ஆட்டத்தை கட்டுப்படுத்திய விதம் சிறப்பானது என தெரிவித்தார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திரும்பி வந்துட்டேனு சொல்லு…! அதிரடி காட்டிய வார்னர்…. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி …!!

டி-20 உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 -வது சுற்றில் இலங்கை- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அடடே..! வெறித்தனமா இருக்கே… அதிர வைத்த ஆப்கான் அணி…. வியந்து போன கிரிக்கெட் உலகம் …!!

ஐசிசி 20ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 12ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2 பிரிவாக பிரிக்கப்பட்டு 6 அணிகள், 6 அணிகள் இடம்பெற்று மோதுகின்றன. குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகளும், குரூப் 2இல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூஸிலாந்து, இந்தியா, ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதல் 2இடத்திலும், குரூப் 2இல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முதல் 2இடத்திலும் உள்ளது. நெட் ரன் ரேட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்திய அணிக்கு 6வது பெளலர் ரெடி… யார் தெரியுமா?

வருகின்ற 31ஆம் நாள் நடைபெறவுள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா நிச்சயம் களமிறக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் ஆஸ்தான ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் ஹர்திக் பாண்டியா. பல அணிகளுக்கு எதிராக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் அண்மையில் அவரது வலது கை தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் கடந்த சில மாதங்களாகவே பந்துவீச முடியாமல் திணறி வந்தார்.அது டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தொடரிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா? வெளுத்து வாங்கிய ஹர்பஜன்சிங் …!!

பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா ? என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீரை ஹர்பஜன்சிங் சாடியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த 24 ஆம் நாள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. இந்த தோல்வி ஏதோ இருநாட்டு போர் போல மாறியுள்ளது. ஆங்காங்கே இருநாட்டு ரசிகர்களும் மனிதத்தை கடைபிடித்தாலும் ஒரு சிலர் தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி வருவது முகம் சுளிக்க வைக்கிறது. இந்த நிலையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அடேடே… என்னமா பந்து வீசுறாரு… நமீபியா வீரர் வரலாற்று சாதனை…. முதல் ஓவரிலேயே 3 விக்கெட்…!!

முதல் ஓவரிலேயே 3 விக்கெட் நமீபியா  அணியின் வீரர் ரூபன் டெம்பிள் மேன் வரலாற்று சாதனை படைத்தார். நடப்பு டி20 உலக கோப்பையின் நேற்றைய சூப்பர் 12 சுற்றில் ஸ்காட்லாந்து – நமீபியா அணிகள் மோதின. அதில் அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார் நமீபியா அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரூபன் டெம்பிள் மேன். டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆட்டத்தின் முதல் ஓபனிங் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் அசத்தியுள்ளார். 23 வயதான இவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா… முகமது ஷமிக்கு பாகிஸ்தான் வீரர் ஆதரவு

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள்,ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முஹம்மது ரிஸ்வான் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார். 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதையடுத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்த ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய ரசிகர்கள் மத ரீதியாகவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன பேசுறீங்க ? அவரு எப்படி பட்டவரு தெரியுமா ? ஷாக் ரியாக்சன் கொடுத்த கோலி

டி-20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இதுகுறித்து விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர் அடுத்த போட்டியில் மிக சிறப்பான பாமில்  இருக்கும்இஷான் கிஷனை  அணியில் சேர்க்கப்பட்டு,  ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா ? என்று கேட்டார். அப்போது விராட் கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முகமது ஷமி நீ பாகிஸ்தானுக்கே போயிடு… வன்மத்தை வீசிய ரசிகர்கள் …!!

டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில், வேக பந்துவீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்று நோக்கியிருந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

T20 உலக கோப்பை…. இந்தியா அணிக்கு இருந்த சிக்கல்…. பாகிஸ்தானால் தகர்ந்தது …!!

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலே பின்னாளில் வரும் போட்டிகளில் இந்தியாவுக்கு நெருக்கடி இருக்காது என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுகள் விருவருப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குரூப் டி யில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் தோல்வியுற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணிக்கு மேலும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா கடவுளே… “இன்னைக்கு நடக்குற போட்டியில இந்தியா ஜெயிக்கணும்”… யாகம் நடத்தி பிராத்தனை செய்த ரசிகர்கள்…!!!

இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நேற்று சிறப்பு யாகம் நடத்தி பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: ஹாட்ரிக் வெற்றி பெறுமா ஸ்காட்லாந்து… அனல் பறக்க போகும் இன்றைய ஆட்டம் …!!

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள்   குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. ஓமனில் உள்ள அல் அமரத் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 9ஆவது போட்டியில் பங்களாதேஷ் – பப்புவா நியூ கினி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: தெறிக்க விட்ட ஜோஸ் பட்டலர்…! சூப்பராக வென்ற இங்கிலாந்து …!!

இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள்   குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. அதே போல குரூப் 1 ( ஆஸ்திரேலியா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: மரண அடி அடித்த ஓப்பன்… சரண்டர் ஆன வெஸ்ட் இண்டீஸ்… ஆப்கான் ஸ்டைலிஸ் வெற்றி …!!

ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 56 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள்   குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. அதே போல குரூப் 1 ( […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த 11 பேர் இறங்கினால் நல்லா இருக்கும்… இந்திய அணியை தேர்வு செய்த பார்த்தீவ் பட்டேல்!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து இருக்கிறார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி தகுதி சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதற்கிடையே பயிற்சி போட்டிகளும் நடைபெற்று வருகிறது.. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பயிற்சிப் போட்டியில்  இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: கடைசி ஓவரில் W.W.W.W….! ஹாட்ரிக் எடுத்து கலக்கல்…. செம போடு போட்ட பப்புவா நியூ கினி வீரர் …!!

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பப்புவா நியூ கினி வீரர் புவா மோரியா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து – பப்புவா நியூ கினி அணிகள் மோதின.  டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பேட் செய்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: பொடிபொடியாகிய நமீபியா…. இலங்கை சூப்பர் டூப்பர் வெற்றி …!!

நமீபியா உடனான ஆட்டத்தில் ஸ்ரீலங்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீலங்கா – நமீபியா அணிகள் மோதின.  முதலில் பேட் செய்த நமீபியா அணி 19.3  ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96  ரன்கள் மட்டுமே சேர்த்தது 97 எடுத்தால் வெற்றி என்ற எளிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: கடைசி ஓவர் வரை திக் திக்…. ஆஸி. அணி திரில் வெற்றி….!!

நியூசிலாந்து அணியுடனான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. அபுதாவியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடு  ஆஸ்திரேலியா அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: இஷான் கிஷன், கே.எல் ராகுல் மரண அடி…. இங்கிலாந்தை பந்தாடிய இந்தியா …!!

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியில் இந்திய அணி 7விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் 188 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: நசுக்கி எடுத்த இலங்கை…. 96ரன்னில் சுருண்ட நமீபியா …!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீலங்கா – நமீபியா அணிகள் மோதின.  முதலில் பேட் செய்த நமீபியா அணி 19.3  ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96  ரன்கள் மட்டுமே சேர்த்தது 97 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஸ்ரீலங்கா  அணி ஆடி வருகின்றது. நமீபியா அணி பேட்டிங்: ஸ்ரீலங்கா பௌலிங்:

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: மரண அடி அடித்த ஜேம்ஸ் நீஷம்….. ஆஸி. அணிக்கு 159 டார்கெட் ….!!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. அபுதாவியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடு  ஆஸ்திரேலியா அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி பேட்டிங்: ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சு:

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: பவுலர்களை தும்சம் செய்த இங்கிலாந்து…. இந்தியாவுக்கு பெரிய இலக்கு …!!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் 188 ரன் குவித்துள்ளது இங்கிலாந்து பேட்டிங்: இந்தியா பௌலிங்:

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: மிரட்டிய பவுலர்கள்…. வீழ்ந்த ஆப்கானிஸ்தான்…. மாஸ் காட்டிய தென் ஆப்பிரிக்கா …!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. அதே போல 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன.அபுதாபியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதியது. தென் ஆப்பிரிக்கா பேட்டிங்: ஆப்கானிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: பொறுப்புடன் ஆடிய ஐடன் மார்க்ரம்…. சூப்பர் டார்கெட் வைத்த தென் ஆப்பிரிக்கா ..!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. அதே போல 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. அபுதாபியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதியது. முதலில் பேட் செய்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பெரும் அதிர்ச்சி….! ”யுவராஜ் சிங் கைது” போலீஸ் பரபரப்பு தகவல் …!!

சாதிய வன்மத்துடன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் பந்துவீச்சாளர் யுவேந்திர சஹலுடன் பேசியபோது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை யுவராஜ் சிங் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஹரியானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் யுவராஜ் சிங்கை கைது செய்ததாகவும், சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: வெல்லுமா இந்தியா ? இங்கிலாந்துடன் இன்று மோதல் …!!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன.  அபுதாவியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதவுள்ளது. பின்னர் இதே மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடு  ஆஸ்திரேலியா அணி மோதுகிறது. அதே போல துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: புதிய சாதனை படைத்து கலக்கல்…. அசத்திய ஷாகிப் அல் ஹசன்..!!

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் என்ற புதிய மைல்கல் சாதனை வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆட்டத்தின் போது அவர் இந்த சாதனையை வசமாக்கினார். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 107 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், ஷாகிப் அல் ஹசன் 108 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.  

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SCOvBAN: கடைசி பந்து வரை திக் திக்…! அனுபவமான வங்கதேசத்தை சரித்து… ஸ்காட்லாந்து சூப்பர் வெற்றி …!!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் அனுபவமிக்க வங்கதேச அணியை ஸ்காட்லாந்து அணி தோற்கடித்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் கிறிஸ் கிரேவ்ஸ் 45 ரன்களை விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. 141 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி வீரர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டீம் வலுவா இருக்கு… இதுவே கடைசி… கோலிக்கு கோப்பையை கொடுங்க… அறிவுரை சொல்லும் ரெய்னா!!

இந்திய அணி வீரர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு விராட் கோலிக்கு  கோப்பையை பெற்று தரவேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.. 16அணிகள் பங்கேற்கும் 7ஆவது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஓமனில் 6 போட்டிகள் மட்டுமே நடக்கிறது.. மற்ற போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சார்ஜா அபுதாபி ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளது.. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்திருக்கும்  அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கண்டிப்பாக… அடுத்த சீசனில் களமிறங்கனும்… தோனியை புகழ்ந்து பேசிய சேவாக்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் நிச்சயமாக விளையாட வேண்டும் என்று முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது..  கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது .சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விட மாட்டோம்… “கப்பலுக்கு தலைவன் தேவை”… சி.எஸ்.கே எடுத்த முடிவு… தல தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி!!

முதல் வீரராக தோனியை தக்க வைத்துக் கொள்வோம் என்று சென்னை அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது.. சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று தந்த தல தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. ஐபிஎல்லில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 9 முறை இறுதி போட்டிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 முறை கோப்பையை வென்றவர்… இவர் இருப்பது எனக்கு மகிழ்ச்சி…. தோனியை புகழும் விராட்!!

இந்திய அணியின் ஆலோசகராக நியமனம் தோனி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்திய அணி 18ஆம் தேதி (நாளை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியையும், 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி முக்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்ளீஸ் என் மனைவி கர்ப்பிணி… அவரை விட்டுடுங்க… கெஞ்சி கேட்ட கிறிஸ்டியன்!!

கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மோசமாக பேசாதீர்கள் அவரை விட்டுவிடுங்கள் என்று ஆர்சிபி கிரிக்கெட் வீரர் கிறிஸ்டியன் கெஞ்சி கேட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் நேற்று முன்தினம் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.. இதில் டாஸ் வென்ற கோலி தலைமையிலான பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து 7 விக்கெட் இழந்து 138 ரன்கள் எடுத்தது.. அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்களும் படிக்கல் 21 ரன்களும், […]

Categories

Tech |