Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்-லில் சுரேஷ் ரெய்னா…. இந்தப் பயிற்சியாளரும் இருக்கிறார்…. என்ன ரோல் தெரியுமா….?

சுரேஷ் ரெய்னாவும் ரவி சாஸ்திரியும் ஐபிஎல் போட்டிக்கு வர்ணனையாளராக களமிறங்கவுள்ளனர் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கியவர சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பு வாய்ந்த வீரராக அவர் இருந்த போதும் இந்த ஆண்டின் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் சுரேஷ்  ரெய்னாவை  எடுக்கவில்லை. அதோடு மாற்று வீரராக கூட யாரும் அவரை தேர்ந்தெடுக்கவில்லை. இதனிடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து சிறந்த வர்ணனையாளராக  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாதுகாப்பு வேலி உடைத்து…. செல்பி எடுக்க இப்படியா பண்ணனும்….? விராட் ரசிகர்கள் அட்டுழியம்….!!

 2வது டெஸ்ட் போட்டியின் போது விளையாட்டு மைதானத்திற்குள் மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி நுழைந்து விராட்டுடன் செல்பி எடுத்துள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணியில்  விளையாடிய முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இதனால் போட்டி சிறுது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .  அப்போது கோலி ஸ்லீப் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று எண்ணி சந்தோஷத்திலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரோஹித்தின் கருத்தை” ஒருபோதும் ஏற்க முடியாது…. “அஸ்வினை” கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் சீனியர்….!!

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லதிப் அஸ்வினை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அந்த போட்டியில் ஜடேஜா 175 ரன்களையும், (4,5) 9 விக்கட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேபோல் இந்த போட்டியில் அஸ்வினும் (2,4) 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவ்வாறு இருக்க ஆட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டெஸ்ட் சாம்பியன்ஷிப்” போட்டி…. இறுதியில் “இந்த அணிகள்” மோத வாய்ப்பு…. ஆகாஷ் சோப்ரா கருத்துக்கணிப்பு….!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 தொடருக்கான புள்ளி பட்டியல் விகிதங்கள் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவது வைத்து கணக்கிடப்படுகிறது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது வழக்கமாகவுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு மிகவும் வருத்தமான நாள் இது”…. உருக்கமான கடிதம் எழுதிய “இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர்”….!!

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தான் ஓய்வு பெறப்போவதாக உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணியில் ஸ்ரீசாந்த் வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். இவர் மொத்தமாக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவ்வாறு இருக்க கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போட்டிகளில் பங்கேற்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 7 வருடங்கள் கழித்து ஸ்ரீசாந்த் நீதிமன்றத்தை நாடி கடந்த 2020 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: பிரபல டென்னிஸ் வீரருக்கு தடை…. அதிரடி அறிவிப்பு…!!!

டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வுக்கு 8 வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகன் ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் ஜோடி ஹர்ரி ஹெலியோவாரா ஜோடியிடம் தோற்றது. இதனையடுத்து நடுவர் தீர்ப்பு தான் தோல்விக்கு காரணம் என ஸ்வெரவ் டென்னிஸ் மட்டையை கோபத்துடன் உடைத்தார். இதனால் ஸ்வெரவ் எட்டு வார காலத்துக்கு டென்னிஸ் போட்டியில் பங்கேற்க டென்னிஸ் வீரர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: “கபில் தேவின்” சாதனை முறியடிப்பு…. புதிய சாதனை படைத்த பிரபல வீரர்….!!

அஸ்வின் கபில் தேவின் சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் 2- ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4 ஆம் தேதி மொகாலியில் தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 129.2 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. அப்போது ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 228 பந்துகளுக்கு 175 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: அபார வெற்றி பெற்ற இந்திய அணி…. “ஜடேஜாவை” புகழ்ந்து தள்ளிய கேப்டன்….!!

இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு பேசிய கேப்டன் ரோகித் ஜடேஜாவை புகழ்ந்துள்ளார். இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4 ஆம் தேதி மொகாலியில் தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 129.2 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. அப்போது ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 228 பந்துகளுக்கு 175 ரன்கள் குவித்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS AUS: எந்த அணிக்கு சாதகம்…. எதுக்கு பாதகம்னு பாருங்க…. “24 வருஷத்துக்கு” அப்புறம்…. இதோ வெளியான தகவல்….!!

பாகிஸ்தானில் நாளையிலிருந்து ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு பின்பு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. பாகிஸ்தானில் நாளை ஆஸ்திரேலிய அணி சுமார் 24 வருடங்களுக்கு பின்பு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர் மற்றும் ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு இருக்க பாகிஸ்தானில் வேகப்பந்து வீச்சை விட, சுழற்பந்து வீச்சுக்கு தான் பிட்ச் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL TEST: “100 ஆவது போட்டி”…. இலக்கை அடைவார “கோலி”…. காத்துகிட்டிருக்கும் லெஜெண்ட்ஸ் லிஸ்ட்….!!

இலங்கைக்கு எதிராக மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் கோலி 38 ரன்களை அடித்தால் டெஸ்ட் தொடர்களில் 8000 ரன்களை குவித்துள்ள 5 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்து விடுவார். இலங்கை அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4 ஆம் தேதி துவங்கவுள்ளது. அவ்வாறு நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் தொடர் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மதவெறிக்கு மருந்து கிடையாது”…. அதுக்கும் மேல… “இவங்க இந்தியர்களே கிடையாது”…. கடுமையாக சாடிய “முகமது ஷமி”….!!

2021ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வியடைந்ததற்கு முகமது ஷமியை மதரீதியாக விமர்சித்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அவர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானும், இந்திய அணியும் மோதியுள்ளது. அவ்வாறு முதல் லீக் போட்டியில் மோதிய இந்திய அணி படுமோசமாக சொதப்பி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: 3 rd டி20 போட்டி…. டாஸ் வென்ற “இலங்கை அணி”…. “நாங்க விரும்பியது கிடைச்சிருக்கு”…. ரோஹித் மாஸ் பேட்டி….!!

இந்தியாவுக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ்ஸை வென்றுள்ளது. இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி லக்னோவில் நடைபெற்றுள்ளது. இதில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 2 ஆவது போட்டி தர்மசாலாவில் வைத்து நடைபெற்றுள்ளது. அதிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஞ்சிக் கோப்பை தொடர்: “மகளின் மறைவை மறந்து”…. சதமடித்த சோலங்கி…. ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்….!!

ரஞ்சிக் கோப்பை தொடரில் சில நாட்களுக்கு முன்பு மறைந்த தனது மகளின் சோகத்தையெல்லாம் மறந்துவிட்டு விஷ்ணு சோலங்கி ஆட்டமிழக்காமல் 103(161) ரன்களை குவித்து அசத்தியுள்ளார். ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆவது சுற்றில் டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆகையினால் சண்டிகார் பேட்டிங் செய்ய யாருமே பெரியளவு ஸ்கோரை அடிக்காமல் இருந்துள்ளார்கள். அந்த அணி முதல் இன்னிங்சில் 168/10 ரன்களை மட்டுமே குவித்துள்ளது. அதன் பின்பு களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL 15 ஆவது சீசன்”…. எதிரெதிர் பிரிவில் “சென்னை-மும்பை அணி”…. வெளியான முக்கிய அறிக்கை…!!

15 ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ள நிலையில் அதில் பங்கேற்கும் 10 அணிகளும் எந்த சுழற்சிமுறையில் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார்கள் என்ற தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார். ஐபிஎல்லின் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து மார்ச் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொண்ட 15 ஆவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: 2 ஆவது போட்டி…. குறுக்கிடுமா மழை…? பிட்ச் ரிப்போர்ட்டின் முழு விபரம் இதோ….!!

இந்தியா, இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகளின் 2 ஆவது தொடர் நேற்று தர்மசாலா மைதானத்தில் வைத்து நடைபெறும் போது நிச்சயமாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 2 ஆவது போட்டி தர்மசாலாவில் நேற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடுத்த 2 ஆட்டத்தில் பாப்போம்”…. கிஷனை ஓவரா புகழாதீங்க…. விமர்சித்த சுனில்….!!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற கிஷனை பலரும் பாராட்டி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் அவர் குறித்த எதிர்மறை விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். இந்தியா, இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியின் முதல் தொடர் லக்னோவில் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் இஷான் கிஷன் 80 ரன்களை குவித்து இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: அபார வெற்றி பெற்ற “இந்தியா”…. பட் “பீல்டிங் தான்” கொஞ்சம்…. அதிருப்தி தெரிவித்த “ரோகித்”….!!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு அதன் கேப்டன் ரோகித் செய்தியாளர்களிடம் பேசியபோது பீல்டர்கள் தொடர்ந்து கேட்ச்களை தவற விடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரின் முதல் நாள் போட்டி லக்னோவில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா இருந்துள்ளார். இதனையடுத்து டாஸ்ஸை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: 2 ஆவது போட்டி… “ருதுராஜ்க்கு வாய்ப்பு” கிடைக்குமா…? ரோகித்தின் திட்டம் என்ன?….!!

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள். இலங்கை இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி நேற்று லக்னோவில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையே இந்திய அணியில் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2 ஆவது போட்டியிலும் இவர் பங்கேற்க மாட்டார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: கடுமையாக சொதப்பிய “பேட்ஸ்மேன்கள்”…. இந்தியா அபார “வெற்றி”… எவ்ளோ ரன்கள் வித்தியாசத்தில் தெரியுமா?…!!

லக்னோவில் துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நேற்று இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளது. இலங்கை இந்திய அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் லக்னோவில் நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் இலங்கை அணி டாஸ்ஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆகையினால் இந்திய அணியிலிருந்து ஓபனர்களாக முதலில் களமிறங்கிய ரோகித் ஷர்மாவும், கிஷனும் தொடர்ந்து ரன்களை குவிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனையடுத்து ரோகித் சர்மா 44/32 ரன்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: கிஷனின் “அபார ஆட்டத்திற்கு” இதான் காரணம்…. வீக்னஸை கண்டறியாத பவுலர்கள்….!!

லக்னோவில் துவங்கியுள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 20 ஓவர்களின் முடிவில் 199/2 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. இலங்கை இந்திய அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் லக்னோவில் நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் இலங்கை அணி டாஸ்ஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆகையினால் இந்திய அணியிலிருந்து ஓபனர்களாக முதலில் களமிறங்கிய ரோகித் ஷர்மாவும், கிஷனும் தொடர்ந்து ரன்களை குவிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனையடுத்து ரோகித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: ஒதுக்கப்பட்ட “ருதுராஜ்”…. ரோகித் சர்மாவின் திட்டம் “இதுதானா”…? அதிருப்தியில் ரசிகர்கள்….!!

இலங்கைக்கு எதிரான டி20 இந்திய அணியில் ருதுராஜ்ஜின் பெயர் இடம் பிடிக்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 போட்டி லக்னோவில் நேற்று துவங்கியுள்ளது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த பிறகு ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் சேஸ் செய்ய தான் விரும்புகிறோம், பிட்ச் எப்படி ஒத்துழைக்கும் என்பது குறித்து எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் ருதுராஜின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரு செய்வது ரொம்ப தப்பு…! “தாய்நாடும் நமக்கு முக்கியம்”…. பொல்லார்ட்டை வறுத்தெடுத்த “ஆகாஷ் சோப்ரா”….!!

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பொல்லார்ட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் படுதோல்வியடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மேற்கு இந்திய தீவு அணியில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஐபிஎல் தொடரில் அளவுக்கு அதிகமாக ரன்களை குவித்த பொல்லார்ட் டி20 தொடரில் தனது திறமையை காண்பிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடிக்கு மேல் அடி…! “தீபக் சஹாரை” தொடர்ந்து முக்கிய புள்ளியை தூக்கிய “பிசிசிஐ”…. எதுக்குனு தெரியுமா?….!!

காயத்தால் அவதிப்பட்டு வந்த சூர்யகுமார் யாதவை இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியின் இந்திய அணியிலிருந்து நீக்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா இலங்கை அணிகளுக்கான 3 போட்டிகள் கொண்ட டி20 பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து லக்னோ மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி போட்டியில் பந்து வீசிய போது தீபக் சஹாரேவுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை பிசிசிஐ டி20 போட்டியில் இலங்கைக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நீ புதிய தலைமுறையை வழிநடத்தும் ஜாம்பவான்”…. புகழ்ந்து தள்ளிய “யுவராஜ் சிங்”…. யாரன்னு தெரியுமா….?

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் 2 ஆம் நாள் தொடரில் விளையாடி அரைசதம் அடித்த கோலியை பாராட்டி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தலைமையில் கடைசியாக இந்திய அணி தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆனால் அவரால் அதில் பெரிய அளவில் ஸ்கோர்களை எடுக்க முடியவில்லை. இதற்கிடையே ஒரு நாள், டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி தென்னாபிரிக்காவுக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH: “தீபக் சஹாரை” இந்திய அணியிலிருந்து நீக்கிய “பிசிசிஐ”…. எதுக்குன்னு தெரியுமா…? இதோ வெளியான தகவல்….!!

இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் விளையாட விருந்த தீபக் சஹாரை இந்திய அணியிலிருந்து நீக்கியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா இலங்கை அணி பிப்ரவரி 24 முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடவிருந்த தீபக் சஹாரை இந்திய அணியிலிருந்து நீக்கியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏனெனில் தீபக்கிற்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அப்போ சிஎஸ்கே…. இப்ப இந்தியா…. “பௌலிங் குறித்து ஷர்தூல் தாகூர் ஓபன் டாக்”…. அப்படி என்ன சொன்னாரு….!!!

 பௌலிங் எப்படி செய்யலாம் என்பது குறித்து ஷர்தூல் தாகூர் கூறியுள்ளார்.  கொல்கத்தாவில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்று நாள் டி20 நடந்து வருகின்றது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. மேற்கிந்திய தீவானது டாஸ் வென்று பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணி களம் இறங்கியது. இதில் இஷான் கிஷன்   34 (31), சூர்யகுமார் யாதவ் 65 (31), வெங்கடேஷ் […]

Categories
கிரிக்கெட்

“நீ சீக்கிரமா ஓய்வு சொல்லிடு”…. சீனியர் வீரருக்கு திராவிட் கூறிய அறிவுரை…. அது யார் தெரியுமா?….!!!

இலங்கை, இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. போட்டிகள் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறும். டி 20 போட்டிகள் 24, 26 ,27 ஆகிய தேதிகளில் லக்னோ, தர்மசாலா மைதானங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. மார்ச் 4-8 (மொகாலி) மார்ச்12-16 (பெங்களூர்) ஆகிய தேதிகளில் நடைபெறும். அதிலும் […]

Categories
கிரிக்கெட்

பிசிசிஐ கூறியது பொய்…. “ஹார்திக் பாண்டியாவுக்கு இனி இடமில்லை”…. அதிரடி முடிவெடுத்த பிசிசிஐ….!!

இந்திய அணியின் வேகப்பந்து விச்சு மற்றும் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா. இவர் கடந்த 2019 அறுவை சிகிச்சை கொண்டதிலிருந்து பந்து வீச முடியாமல் இருந்து வருகிறார். கடந்த ஐபிஎல் 16 வது  சீசனிலும் பந்து வீசவில்லை இதன் காரணமாக தொடங்கயிருந்த  டி20 உலக கோப்பையில் இவர் சேர்க்கப்பட மாட்டார் என கருதப்பட்டது. இருப்பினும் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா இதுகுறித்து விளக்கம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி “ரோஹித் சர்மா” தான் கேப்டன்…. அதிரடி கொடுத்த “பிசிசிஐ”….. அதிருப்தியில் ரசிகர்கள்….!!

டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பை ஆகிய மூன்றுவிதமான அணிகளின் கேப்டன் பதவியை பிசிசிஐ ரோஹித்திடம் ஒப்படைத்துள்ளது. இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே பிசிசிஐ ஒரு நாள், டி20, இந்திய டெஸ்ட் அணிகளுக்கு தனித் தனி கேப்டன் இருந்தால்தான் அழுத்தமின்றி விளையாட முடியும் என்ற நோக்கில் விராட் […]

Categories
விளையாட்டு

“எதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்”…. தயவு செஞ்சு சொல்லுங்க…. விரக்தியில் இளம் வீரர்….!!!

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியுள்ளது. இதில் முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 16 ம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவில் துவங்கியுள்ளது. முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி அடுத்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2-0 என்ற […]

Categories
விளையாட்டு

‘சுலபமான கேட்ச்’…. தவற விட்ட வீரர்….. கோபத்தில் பந்தை எட்டி உதைத்து திட்டிய ரோகித் சர்மா….!!!!

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் அடுத்து இரண்டாவது போட்டி துவங்கியுள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருக்கும், இந்த நெருக்கடியில் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியுள்ளது. இப் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில்186/5 ரன்களை சேர்த்து அசத்தியது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் வரிசை வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடக்கடவுளே…! இந்திய அணியிலிருந்து விலகிய “விராட்கோலி”…. கேப்டனிஷத்தில் மீண்டும் பிரச்சனையா…? உண்மையை உடைத்த பிசிசிஐ…!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி திடீரென பயோ பபுலில் இருந்து விலகி மும்பைக்கு சென்றுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றுள்ளது. அதில் கோலி அரை சதம் அடித்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென பயோ பபுலில் இருந்து விலகி மும்பைக்கு சென்றுள்ளார். இதனால் ஷாக்கான ரசிகர்கள் மீண்டும் கேப்டனிஷத்தில் பிரச்சனை எழுந்துள்ளதா என்ற குழப்பத்தில் இருந்துள்ளார்கள். இவ்வாறு இருக்க பிசிசிஐ வட்டாரம் […]

Categories
கிரிக்கெட்

‘உனக்கு கடைசி சான்ஸ் இதுதான்’…. எச்சரிக்கை விடுத்த ரோகித் சர்மா…. நெருக்கடியில் ஷ்ரேயஸ் ….!!!!

இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்று டி 20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 162 ரன்கள் அடித்த நிலையில் இந்தியா  இரண்டாவதாக களமிறங்கியது. ஓபனர்கள் ரோஹித் ஷர்மா  40 (19), இஷான் கிஷன் 35 (42) சிறப்பான துவக்கம் தந்ததுள்ள  நிலையில், வழக்கம்போல மிடில் வரிசை திணறியது. கோலி 17 (13), ரிஷப்  பந்த்  8 (8) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவருடைய வயது 19 அல்ல 21…! உண்மையை உடைத்த “மராட்டிய வாரியம்”…. என்ன செய்யப்போகிறார் “CSK வீரர்”…? விசாரணையில் இறங்கிய “பிசிசிஐ”…!!

பெங்களூரில் வைத்து நடைபெற்ற ஐபிஎல் மிக ஏலத்தில் சிஎஸ்கே அணி 1.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்த ராஜ்வர்தனின் உண்மையான வயது 19 அல்ல 21 என மராட்டிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஓம் பிரகாஷ் பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார். பெங்களூரில் வைத்து ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலம் கடந்த 13 ஆம் தேதி நடை பெற்றுள்ளது. இதில் 1.5 கோடி கொடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் உலக […]

Categories
கிரிக்கெட்

13 பந்துகளில் அரைசதம்…. “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தமான வீரர்”…. மாஸ் காட்ட போகும் கொல்கத்தா அணி….!!!!

வங்கதேச பிரிமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த  லீக் சுற்றில் அனைத்தும் நடந்து முடிந்து குவாலிபையர்  தொடங்கப்பட்டு விட்டன. இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் சாட்டோகிராம்  சாலஞ்சர்ஸ், விக்டோரியன்ஸ்  அணிகள் மோத உள்ளன. இதில் முதலில் சட்டோகிரம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சாட்டோகிராம்  அணியில் அதிகபட்சமாக மெகிடி ஹாசன் 44 (38), அக்பர் அலி 33 (20) ஆகியோர் பெரிய ஸ்கோர்  அடித்துள்ளனர். மேலும் மற்றவர்கள் சிறப்பாக செயல்படாததால் இந்த அணி […]

Categories
கிரிக்கெட்

‘இவரு பண்ணது தா தப்பு’…. இதுக்காகத்தான் இவர டீமில் சேர்த்துக்கல…. முன்னாள் வீரர் அளித்த பேட்டி …!!!

ஐபிஎல் கிரிக்கெட் 15-வது சீசனுக்கான ஏலம்  சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை எடுத்துள்ளது. இதில் 7 பேர் வெளிநாட்டு வீரர்களும், 14 பேர் உள்நாட்டு வீரர்களும் இருக்கிறார்கள். இவர்களை வாங்கிய பிறகு 45 கோடியில் 2.85 கோடி ரூபாய் இருந்துள்ளது. இந்த அணியில் ஏற்கனவே தோனி, ஜடேஜா , ராஜ் மொயின் அலி ஆகியோரை சி.எஸ்.கே தக்கவைத்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள தொகையை பயன்படுத்தி ஷாருக்கான்  போன்ற வீரர்கள் கூடுதல் தொகை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: “ரஹானேவை” தூக்கிய கொல்கத்தா…. எத்தன கோடிக்கு தெரியுமா…? வெளியான தகவல்….!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆம் நாள் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்திய வீரர் ரஹானேவை 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது மெகா ஏலம் இன்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலம் விடப்படவுள்ளார்கள். அவ்வாறு ஏலத்தில் விடப்படும் வீரர்களை […]

Categories
கிரிக்கெட்

நம்ம இந்திய பிட்சில்…. “இவர மாதிரி ஒருத்தர நான் பாத்ததே இல்ல”…. புதுசா இருந்துச்சு…. ஓபனாக பேசிய ரோஹித் ….!!!

மேற்கத்திய நாடுகளுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்ற இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கத்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி உள்ளது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியடைந்த நிலையில் கடைசி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர்80(111,) ரிஷப் பந்த்56(54) ஆகியோர் ரன்களை குவித்தனர். […]

Categories
கிரிக்கெட்

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த ஏலம்…. “ஏலமிட்டவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு”…. முழு விபரம் இதோ…!!!

ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஏழமிட்டவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த 15 வது சீசனுக்கான ஏலம்  நடைபெற்று வந்த நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. விறுவிறுப்பாக ஏலம்  நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஏலமிட்டு  வந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏலம் தொடர்ந்து நடைபெறவில்லை சிறுது இடைவெளி விடப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலங்கை வீரர்களை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணி கடுமையாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போடு ரகிட ரகிட!…. 44 ரன்கள் வித்தியாசத்தில்…. தட்டித் தூக்கிய இந்திய அணி….!!!!

நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பந்த், விராட் கோலி, ரோஹித் சர்மா என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணியின் ஸ்கோர் கணக்கு உயர்ந்தது. இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் […]

Categories
கிரிக்கெட்

“கம்முன்னு இருங்க எனக்கு எல்லாம் தெரியும்…!! ” கோலியை வச்சு செய்த ரோஹித்… வைரல் புகைப்படங்கள்..!!

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 178/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுதான் ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக இருக்கும் முதல் போட்டி. பந்து வீச்சின் போது கோலி சஹாலிடம் ஆலோசனை வழங்கியிருந்தார். இதேபோல் பீல்டிங் செட் செய்வது குறித்து ரோஹித் சர்மாவிற்கும் பல ஆலோசனைகள் கூறினார். இதனால் இந்திய அணி அடுத்தடுத்து […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

“என்னால தாங்க முடியல”… இன்னும் வலிக்குது… வெறும் “8 ரன்” தான்… நினைவு கூர்ந்த கேப்டன்….!!

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 9 ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையை வெல்லாதது இன்னும் வலிக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற 9 ஆவது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துள்ளார். இவருடைய அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 9 ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்றுள்ளது. இந்த விளையாட்டில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

இதோ… ஆரம்பிச்சாச்சு “ஒருநாள் கிரிக்கெட் தொடர்”… இலக்கைத் தொடுமா பிரபல ஜோடி…? அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்….!!

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 81 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி ரோஹித் சர்மா விராட் கோலி ஜோடிகள் 4904 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மற்றும் கங்குலி சேர்ந்து விளையாடுவது தலைசிறந்த ஜோடியாக தெரியும். இவர்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 176 இன்னிங்சில் விளையாடி 8227 ரன்களை குவித்துள்ளார்கள். இதனையடுத்து விராட் கோலி ரோகித் சர்மா ஜோடிகள் 5000 ரன்களை எடுக்க இன்னும் 96 ரன்களே தேவைப்படுகிறது. இந்நிலையில் நாளை இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#U19CWC: இங்கிலாந்தை நச்சு எடுத்த இந்தியா…! உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தல் …!!

ஐசிசி அண்டர்-19  50ஓவர்  உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் இங்கிலாந்து vs இந்தியா அணிகள் மோதின.  வெஸ்ட் இண்டீஸ்சில் நார்த் சவுண்ட்டில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பாவா, ரவிக்குமார் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இங்கிலாந்து பேட்டிங்: இங்கிலாந்து அணியின் ரெவ் மட்டும் 95ரன் எடுத்து ஆட்டமிழக்க, சேல்ஸ் 34* ரன்னோடு களத்தில் இருக்க ஏனைய […]

Categories
விளையாட்டு

“ஒன்னும் கவலை படாதீங்க இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கு…!!” மைக்கேல் வாகன் புகழாரம்…!!

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்காண ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்த போட்டியின் அரையிறுதி சுற்றில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது. தீவிரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் யாஷ் தல் 110 ரன்களில் வெளியேறினார். இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன் […]

Categories
உலக செய்திகள்

மே. இ தீவுகள் அணியில் தொடரும் சர்ச்சை….!! “அப்படி நடக்க விடமாட்டோம்…” பயிற்சியாளர் விளக்கம்….

மேற்கிந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து டீ20 மற்றும் 3 டெஸ்டில் விளையாடுகிறது . டி20 தொடர் ஜனவரி 23 தொடங்கி ஜனவரி 31 வரை நடைபெற இருக்கிறது. இதேபோல் டெஸ்ட் தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் தொடரில் ஓடியன் ஸ்மித் இடம்பெறாததால் அணி வீரர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டெஸ்ட் கேப்டன் யார்?…. செம பிளேயர்…. “இவர் தான் நம்பர் 1 சாய்ஸ்”…. முன்னாள் வீரர் அசாருதீன் கருத்து.!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தனது கருத்தை கூறியுள்ளார்.. தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து, விலகி அதிர்ச்சி கொடுத்தார் விராட் கோலி.. இதையடுத்து இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக யாரை நியமிப்பார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021ல் சிறந்தவர் இவர்தான்…. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீராங்கனை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

2021 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஐசிசி  ஸ்மிரிதி மந்தனாவை தேர்வு செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி தேர்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது. அவ்வகையில் 2021 வருடத்திற்கான சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஸ்மிரிதி  மந்தனா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவின் ஸ்மிரிதி  மந்தனா கிரிக்கெட்டில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக  தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அயர்லாந்தை சேர்ந்த கோபி லீவிஸ், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த லிஜேல் லீ, இங்கிலாந்தை சேர்ந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி….!!!!

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து ஆகவேண்டும். கேப்டன் பதவியில் இருந்து விலக இது தான் சரியான தருணம். இந்த பதவிக்கு 120 சதவிகிதம் அர்ப்பணிப்பு கொடுத்து உள்ளேன். ஆனால் அதை இப்போது கொடுக்க முடியாததால் இதுதான் சரியான முடிவு என்று கருதுகிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: ஒய்வு பெறுகிறேன்…. குவின்டன் டிகாக் திடீர் அறிவிப்பு…!!!!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் குவின்டன் டிகாக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 29 வயது மட்டுமே ஆன டிகாக் இந்த முடிவை எடுத்துள்ளது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் பன்னாட்டுப் போட்டிகளில் தென்னாபிரிக்கா அணிக்காக  விளையாடி வந்தார். ஜோகானஸ் பேர்க்கைச்  சேர்ந்த இவர் தனது 16வது வயதில் 19-வயதிற்குட்பட்டோருக்கான அணியில் சேர்ந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |