Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி புதிய சாதனை….. எந்த வீரருக்கும் கிடைக்காத பெருமை…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

இந்திய விளையாட்டு வீரர்களில் யாருக்கும் கிடைக்காத பெருமை விராட்கோலிக்கு கிடைத்ததை அவரது ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கிரிக்கெட்டை பொறுத்த வரையில், சச்சின், தோனி, சேவாக் கங்குலி உள்ளிட்ட பலருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் தோனி சச்சின் ஆகியோருக்கு இணையாக கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளம் மற்ற வீரர்களுக்கு கிடையாது. விராட் கோலியை பொருத்தவரையில், அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அதைத்தாண்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகில் எந்த வீரரும் இவரிடம் நெருங்க முடியாது – கௌதம் கம்பீர் பெருமிதம்

பேன்ஸ்டோக்ஸ் போன்று ஒரு சிறந்த வீரர் எந்த அணியிலும் இல்லை என கம்பீர் பேட்டி அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த கௌதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது: இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ் ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். அவருடன் ஒப்பிடும் அளவிற்கு தற்போது எந்த வீரரும் இந்தியாவில் இல்லை. ஏனெனில் பென்ஸ்டாக்ஸ்  தனித்துவம் வாய்ந்தவர்.   டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒரு நொடியும் இனி காத்திருக்க முடியாது” – மகிழ்ச்சியில் சின்ன தல…

ஐபிஎல் போட்டிகளில் களத்தில் இறங்கி விளையாடுவதற்கு இனி ஒரு நொடி கூட காத்திருக்க முடியாது என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற இருந்த ஐபிஎல் தொடர்கொரோனாவின் காரணமாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஐக்கிய அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்சமயம் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளுக்கான அட்டவணைகள் போன்றவற்றை ஐபிஎல் போட்டிகளை நிர்வாகிக்கும் குழு கலந்தாய்வின் மூலம் நிர்ணயிக்க உள்ளது.     இந்த சூழலில் சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்க ஊரு சரியா இருக்கும்… நாம மோத சரியான இடம் இதான்…. OK சொல்லுங்க …!!

இலங்கையில் வங்காளதேசம் டெஸ்ட் தொடரை நடத்த பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருக்கின்றனர். அக்டோபர்- நவம்பரில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்தப் ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டிக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது இந்த தொடரை ஒத்தி வைத்துள்ளனர். இந்த நேரத்தில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர், நவம்பரில்  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணி வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரொம்ப சந்தோஷமா இருக்கு… ”தோனியை பார்க்க போறேன்” உருகிய பேட்மிட்டன் வீரர் …!!

கொரோனா  வைரஸ் தொற்று…. பரவல், அச்சம் காரணமாக சர்வதேச போட்டிகள் என முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  அந்த வரிசையில் பிரபலமான ஐபிஎல் போட்டியும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சார்பாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் அடுத்த வருடம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தான் ஐபிஎல் போட்டி தொடரானது வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 8ம்  தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் சேர்மன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1st ஆளாக அமீரகம் செல்லும் CSK… ! படையை கட்டிய தோனி …!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!!

கொரோனா  வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்  திட்டமிட்டபடி நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்னதாகவே  சென்று பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL-13 TABLE” நம்பாதீங்க…. அது போலி…. BCCI விளக்கம்….!!

சமுக வலைதளங்களில் வலம் வரும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு முதல் ஊரடங்கு உத்தரவானது தற்போதுவரை ஆறாவது கட்ட நிலையில் அமுலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு ஆண்டின் ஐபிஎல் 13 வது சீசன் தொடர் […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

கொஞ்ச நாட்களை குறைத்துகோங்க… வேண்டுகோள் வைத்த கங்குலி…. மறுப்பு தெரிவித்த கிரிக்கெட் வாரியத்தின் பதில்….!!

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் நாட்களை குறைத்துக்கொள்ள கூறிய கங்குலியின் வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.     இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்  தொடர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருடத்தின் முடிவில் செல்ல உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது என்பது அதிகமான நாட்கள் ஆகும். எனவே தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

14 ஆண்டுகளுக்கு பிறகு ஆல்ரவுண்டரில் முதலிடம்… அபாரமாக ஆடிய ஸ்டோக்ஸ் ..!!

சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் ஒருவர் ஆல்ரவுண்டர் தர வரிசை பட்டியலில் முதலாவதாக வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஆல்ரவுண்டர் கான தரவரிசைப் பட்டியலில் தற்போது முதலிடத்தை பிடித்தவர் பென் ஸ்டோக்ஸ். இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தான் கடந்த 18 மாதங்களாக ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவர். தற்போது அந்த இடத்தை பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆவார். இங்கிலாந்தில் ஒருவர் முதலிடத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளைஞர்களை ஆதரிக்கும் குணம்…. கங்குலிக்கு பிறகு விராட் தான்….!!

இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை ஆதரிப்பதில் கங்குலியை  தொடர்ந்து விராட் தான் என்று இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறும்போது, “விராட் கோலி கங்குலியை போன்றே இருக்கிறார். இளம் வீரர்களுக்கு மிகச் சிறப்பான ஆதரவு தருபவர் அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. அவர் தானாகவே முன்வந்து இளைஞர்களை ஆதரிப்பவர். ரிஷப் பந்த் விஷயத்தில் அதை நாம் பார்த்துள்ளோம். அதை வெளிப்படையாக அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரிஷப் பண்ட்” இந்திய அணியின் சிறந்த இளம் கிரிகெட்டர்… சுரேஷ் ரெய்னா பெருமிதம்…!!

இந்திய அணியில் சிறந்த இளம் கிரிக்கெட் என்றால் அது ரிஷப் பண்ட் என சுரேஷ் ரெய்னா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ‘ரிஷப் பண்ட் இந்திய அணியில் சிறந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்’ ஆக உள்ளார் என பெருமிதம் கூறியுள்ளார். மேலும் “எத்தகைய சமரசமும் இல்லாமல் சாதாரணமாக ஆட்டத்தினை விளையாட வேண்டுமெனவும் அவ்வாறு செய்தால் நிறைய ரன்களை எடுக்க இயலும்” எனவும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். உத்திர பிரதேசத்தில் சென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL-லில் இருந்து நீக்கப்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ்…. 4800 கோடி இழப்பீடு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விளக்கப்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ரூபாய் 4,800 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் ஐபிஎல் கிண்ணத்தை வென்ற அணி டெக்கான் சார்ஜஸ். ஹைதராபாத் நகரின் சார்பாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ளது. 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை ஐபிஎல்லில் விளையாடிய இந்த அணியை 2012ம் ஆண்டு விலக்கியுள்ளது பிசிசிஐ நிறுவனம். வங்கி உத்தரவாதம் கொடுத்த தொகையான ரூபாய் 100 கோடியை செலுத்த தவறியுள்ளதால் இந்த […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

எனக்கு உதவி செய்ய யாருமில்லை… தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் உருக்கம்..!!

இந்திய அணியில் உள்ள வரை என் இடத்தை தக்க வைத்துக் கொள்ள நான் எல்லா விதமாகவும் முயற்சி செய்து பார்த்தேன் என்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்தபோது, “என்னால் முடிந்த அளவு அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தேன் அப்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை சச்சின், டிராவிட் லட்சுமண், சேவாக், கம்பீர், யுவராஜ் என நிரம்பி இருந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிகப்பெரிய குழப்பத்தில் இருந்தேன்… என்னை தெளிய வைத்தது இவரே…!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தனது ஓய்வு முடிவை பற்றி பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் தனது ஓய்வு பற்றிய முடிவை எடுத்தது குறித்து தற்போது பகிர்ந்துள்ளார். அதில், கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறினேன். பின்னர் சில யோசனையின் அடிப்படையில் கிரிக்கெட் பயிற்சியாளராக மாறுவது அல்லது சப்-கோச்சாக இருக்கலாம் என முடிவு செய்தேன் ஆனால் இவை இரண்டில் எதை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியா…? கங்குலியா…? எனது ஓட்டு கங்குலிக்கு தான்… பார்த்திவ் படேல் உறுதி ..!!

தோனியா? கங்குலியா? என வந்தால் எனது ஓட்டு கங்குலிக்கு தான் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியை வளர்த்தெடுத்த கேப்டன் யார் என்று  என்னை கேட்டால் என் ஓட்டு சவுரவ் கங்குலிக்குத்தான் என்று இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். இது குறித்து பார்த்திவ் படேல் கூறுகையில், இரு கேப்டன்களுக்கும் இடையேயுள்ள இந்த போட்டி மதிப்புடையதுதான், ஒருவர் அணியை வளர்த்தெடுத்துள்ளார், ஒருவர் நிறைய கோப்பைகளை வென்றுள்ளார். கங்குலி 2000-ல் கேப்டனாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பாகுபாடு காட்டி தனிமையை உணர்த்தினார்கள்” மனம் திறந்த கிரிக்கெட் வீரர் நிதினி…!!

தென்ஆப்பிரிக்க அணியின் சக வீரர்களை இனப்பாகுபாடு காட்டியதால் தனிமையை உணர்ந்ததாக நிதினி குறிப்பிட்டுள்ளார். ‘கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம்’ என்ற இயக்கத்திற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் வீரர் மகாயா நிதினியும் ஆதரவு தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்காக விளையாடிய முதல் கறுப்பின வீரர் இவர். வேகப்பந்து வீச்சாளரான இவர் 101 டெஸ்டில் விளையாடி 390 விக்கெட்களையும், 173 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 1998 – 2011ம் ஆண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர்களே… இவங்க 2 பேரை நினைத்து கவலைப்படாதீங்க… கவுதம் கம்பிர்..!!

ஆஸ்திரேலிய தொடர் நடைபெறும் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்மித், வார்னர் குறித்து கவலைப் படக்கூடாது என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது 2-1 தொடரை எனக்கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதன்பின் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாட உள்ளது. தற்போது ஸ்மித், வார்னர் இருவரும் அணியில் இருப்பதால் சற்று சவாலானதாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவர்கள் வர வேண்டாம்… ‘அனுமதி மறுப்பு’… நிகழ்ச்சியை ரத்து செய்த தோனி.. பயிற்சியாளர் கேரி நெகிழ்ச்சி..!!

எங்களை மறுத்ததால் இந்திய அணியின் நிகழ்ச்சியையே ரத்து செய்தவர் தோனி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கேரி கர்ஸ்டன். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனின் பயிற்சியின் கீழ் 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான எம்எஸ் தோனி பற்றிய ஒரு சம்பவத்தை முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் பகிர்ந்துள்ளார். “தோனி கேப்டன் நிதானமானவர் அதேசமயம் உறுதியானவர் கூட என்று பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் அணியை சேர்ந்த ஒருவருக்கு ஒன்று என்றால் கூட நிற்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு சிக்கல் …. ரசிகர்கள் ஏமாற்றம் …!!

இந்தியா-இங்கிலாந்து இடையே நடக்கயிருந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சென்ற மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதும் நடைபெறவில்லை. 117 நாட்கள் இடைவெளிக்கு பின் சவுதம்டனில் சென்ற வாரம் நடந்த இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே உள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது. விளையாட்டு போட்டிகளை மீண்டும் நடத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்துக்கொண்டு வருகின்றன. ஆனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பையை வென்றால் தான்….. கல்யாணம் பண்ணுவேன்…. முன்னணி கிரிக்கெட் வீரர் பேட்டி….!!

உலகக் கோப்பையில் தங்களது நாட்டு அணி வெற்றி பெற்றால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரபல கிரிக்கெட் வீரர் பேட்டி அளித்துள்ளார். கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் உலகக்கோப்பை என்பது பல நாடுகளுக்கு வெறும் கனவாகவே இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே கோப்பைகளை அதிகம் தட்டிச் சென்றுள்ளனர். அதிலும் சவுத் ஆப்பிரிக்கா போன்ற பலம்பொருந்திய அணிகளால் கூட உலகக்கோப்பையை வெல்ல முடிவதில்லை. இந்நிலையில் உலகக்கோப்பையில் தங்களது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி நம்பினால் வாய்ப்புகள் கிடைக்கும்… நம்பவில்லையென்றால்… தோனி குறித்து பத்ரியின் பதில்..!!

சிஎஸ்கே அணிக்காக தோனி தலைமையில் ஆடிய தமிழக வீரர் எஸ்.பத்ரிநாத் தோனி எப்படிப்பட்ட கேப்டன் என்பதைப் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றில் பத்ரிநாத் கூறுகையில் “தோனி எப்போதுமே அணியில் வீரர்களின் மீது அதிக கவனம் செலுத்துவார். என்னுடைய ரோல் என்பது பெரும்பாலும் கடினமான சூழலிலிருந்து அணியை எப்படியாவது  மீட்க வேண்டும். என் பணியானது மிடில் ஆர்டர் பணியாகும். தோனியின் பலம் என்னவெனில் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்புக்கொடுப்பர். பத்ரி நன்றாக ஆடுகிறார் என்று தோனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல் இல்லாத ஆண்டு ஒரு ஆண்டே இல்லை”- ஜான்டி ரோட்ஸ் வருத்தம் ..!!

ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காலவரையறை இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபற்றி ஜான்டி ரோட்ஸ் ஐபிஎல் இல்லாத இந்த ஆண்டை கடந்து செல்வதை நினைக்கவே மிகவும் கடினமாக உள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது 2008 ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் அட்டவணையில் ஐபிஎல் போட்டி ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இத்தகைய மிகப்பெரிய தொடக்க ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஐபிஎல் போட்டி, நிதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு சொன்னபடி சுதந்திரம் கிடைக்கல – மனம் திறந்த கங்குலி

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிக்க சுதந்திரம் அளிப்பதாக ஷாருக் கூறினார் ஆனால் அளிக்கவில்லை என தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார். இந்தியாவில் 2008-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர்  தொடங்கப்பட்ட போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரில் ஒருவராக ஷாருக் கான் இருந்தார். இப்பொழுது வரை அவர்தான் இருந்து வருகிறார். சவுரவ் கங்குலிக்குப் பிறகு கவுதம் கம்பிர் நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் இருக்கும் போது இரண்டு முறை கொல்கத்தா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கவனக்குறைவால் நடந்த தவறு” கவாஸ்கரின் பிறந்தநாள் பரிசாக மீண்டும் கொடுக்கிறோம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்..!!

கவாஸ்கரின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஐசிசி நிறுவனம் மும்பை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவருக்கென்று இரண்டு இருக்கைகள் தனியாக ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், மற்றும் முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கியவர் சுனில் கவாஸ்கர். இவருக்கு நேற்று 71-வது  பிறந்தநாள். இதை பாராட்டும் விதமாக கவாஸ்கருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), நிறுவனம், இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்துகள்  தெரிவிக்கப்பட்டது. ஐ.சி.சி. தனது வாழ்த்து செய்தியில் இவ்வாறு தெரிவித்திருந்தது, “டெஸ்ட் போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த 10 ஆண்டிற்கு….. CSK வின் BOSS இவர் தான்…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!

அடுத்த பத்து ஆண்டிற்கு சிஎஸ்கே அணியில் பாஸாக தோனி இருப்பார் என அவ்வணியின் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாம் யாரும் மறக்க முடியாத ஒரு தினம். காரணம் என்னவெனில், நேற்றைய தினம் தான் உலக கோப்பையில் தோனி தனது கடைசி ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருந்தார். அதுவே ஒரு புறம் ரசிகர்களுக்கு வேதனையாக இருந்தது. அதோடு சேர்த்து அவரது ரன் அவுட் சம்பவம் தோனி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மீண்டும் களத்தில் இறங்க வேண்டும்” ஆர்வம் காட்டும் ரோகித் மற்றும் ரகானே..!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மீண்டும் களமிறங்க காத்திருக்கிறோம் என தங்களது விருப்பத்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ரோகித் சர்மா, ரகானே தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 13-ம் தேதி முதல் நடக்க இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்றின் காரணமாக நடைபெறவில்லை. 117 நாட்களுக்குப் பிறகு நேற்று இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் அரங்கேறியது. இப்பொழுது வரை கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வராத நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி பினிஷர் மட்டுமல்ல” இந்த இடத்துல அவர இறக்குவேன்… அப்பவும் பட்டையை கிளப்புவார்… புகழ்ந்து தள்ளிய கங்குலி…!!

தோனி சிறந்த பினிஷர் மட்டுமல்ல எந்த இடத்தில் இறங்கினாலும் சிறப்பாக விளையாடுவார் என்று கங்குலி புகழ்ந்து கூறியுள்ளார் இந்திய அணிக்கு ஒரு சரியான பினிஷர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில், நான் இருக்கிறேன் என்று தனது அற்புதமான ஆட்டத்தினால் ஒரு நல்ல பினிஷராகவும் அணிக்கு சிறந்த தலைவராகவும் டோனி மாறினார். இப்போது நாம் தோனியை இந்த அளவுக்கு பாராட்டி மகிழ்கிறோம் என்றால் அதற்கு காரணம் கங்குலி தான். ஏனென்றால், டோனி முதல் போட்டியில் ரன் எடுக்காமல் நடையைக்கட்டினார். அதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

117 நாட்களுக்கு பிறகு…. ”தொடங்குகிறது சர்வதேச கிரிக்கெட்” ரசிகர்கள் கொண்டாட்டம் ….!!

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில்  இன்று தொடங்குகிறது. 117 நாட்களுக்குப் பிறகும் தொடங்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இந்திய நேரப்படி 03:30 மணிக்கு தொடங்குகிறது,           கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதில் வெற்றி பெறுவது தனித்துவமானது… அதனை நீங்கள் உணர்வீர்கள்… மனம் திறந்த கங்குலி…!!

இங்கிலாந்தில் நடக்கும் நார்த் வெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது தனித்துவமானது என்று கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்  சவுரவ் கங்குலி பற்றி கூறினாலே லார்ட்ஸ் மைதானம் விளையாட்டு அரங்கின் பால்கனியில் நின்று கொண்டு தனது ஜெர்சியை கழற்றி சுழற்றி வெற்றியின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடிய நிகழ்வுதான் ரசிகர்களின் நினைவிற்கு வரும்.              பின் நாட்களில் இந்த வெற்றி கொண்டாட்டமே இந்திய கிரிக்கெட்டின் வெற்றி வரலாற்று சின்னமாக மாறிவிட்டது என்றே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதைவிட எனக்கு குடும்பம் முக்கியம்…. பெரிய பொறுப்பை உதறிய டிராவிட்…!!

தன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாது என்று இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பதை டிராவிட் மறுத்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விராட் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2017 ல் இந்திய அணி பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் அணில் கும்ளே. இதனால் ராகுல் திராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன, ஆனால் தனிப்பட்ட காரணம் கூறி அப்பதவியை மறுத்து விட்டதாக வினோத் ராய் கூறினார். தனியார் இணையதளம் ஒன்றில் பேசிய பிசிசிஐ […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

கடைசில இறங்கினாலும் களத்தில இவர் தான் ஹீரோ… அடிக்கிற ஒவ்வொரு அடியும் சாதனை தான்…!!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு நாள் உலக கோப்பை, டி20 உலகக் கோப்பை , சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் போன்ற அனைத்து வெற்றிகளையும் தனது கேப்டன்ஷிப்பில் தோணி பெற்றார் என்பது மிகச்சிறந்த சாதனையாகும். நியூசிலாந்து அணியின் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்றோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் கேப்டனாக பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் அதிக எண்ணிக்கையில் கேப்டனாக போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

39 -ஆவது பிறந்தநாளை காணும் எம்.எஸ்.தோனி – கவுரவப்படுத்திய பி.சி.சி.ஐ…!!

கிரிக்கெட்டில் தல என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 39 – ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். பெஸ்ட் பினிஷெர் என்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களால் எம்.எஸ்.தோணி அழைக்கப்படுகிறார். இந்தியாவுக்கு 3 வித உலகக் கோப்பைகளை பெற்றுத்தந்த ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி தான். களத்தில் எப்போதும் பதற்றமின்றி காணப்படும் இவர் எதிராணிகளுக்கு எதிரான திட்டங்களை வகுப்பதில் கைத்தேர்ந்தவர். எம்.எஸ்.தோனியின் பிறந்தநாளையொட்டி இந்திய கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

“தரம்… தரம்…. நிரந்தரம்” அனைத்திலும் NO.1…. தல தோனியின் TOP 20 சாதனைகள்….!!

1. உலகிலேயே ஐசிசியின் மூன்று முக்கியமான கோப்பைகளையும் பெற்ற ஒரே கேப்டன் நம்ம தல தோனி. 2. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக  ஸ்டம்பிங்  செய்த விக்கெட் கீப்பர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் தோனி இதுவரை சுமார் 178 ஸ்டம்பிங் செய்துள்ளார். 3. சிக்ஸ் அடித்து போட்டியை வெல்வது என்பது ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிகவும் சவாலான விஷயம் கடைசி நேரத்தில் குறைந்த பந்துகள்  மட்டுமே இருக்கும் நிலையில் துணிந்து 6 அடிப்பது என்பது சாதாரண […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

இவர் வேற ரகம்….. தல தோனியின் கிரிக்கெட் பயணம்….!!

1981- ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாளில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் மகேந்த்ர சிங் தோனி. தனது பள்ளிப்பருவத்தில் கால்பந்து விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட இவர், பின்னர் தனது பயிற்சியாளர்  பேனர் ஜி  அறிவுறித்தியதால் கிரிக்கெட்டில் நாட்டம் கொள்ள ஆரம்பித்தார். கால்பந்து ஆட்டத்தை விட்டுவிட்டு கிரிக்கெட்டில் நுழைந்த தோனிக்கு ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. TTR-ஆக பணிபுரிந்து பல இன்னல்களை சந்தித்த பின் தனது தீவிர முயற்சியால் படிப்படியாக முன்னேறி மாநில அளவிலான கிரிக்கெட்டிலும் பின்னர் இந்தியா […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

முடியாத காரியம் ஏதும் இல்லை….. நிரூபித்து காட்டிய தல…..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக பலரும் செயல்பட்ட நிலையில் தனக்கென முத்திரையை வான்னுயரே எட்டிப்பார்க்க வைத்த நட்சத்திரம் தான் எம்.எஸ் தோணி வேறு எவரும் பெற்று தராத வெற்றியை ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு பெரும் அளவில் பெற்று தந்த கூல் கேப்டன் எம்.எஸ் தோனி. கிரிக்கெட் மைதானத்தில் 7- என்ற எண் கொண்ட உடையை பார்த்ததும் ரசிகர்கள் மனதில் நினைவிற்கு வருவது இந்திய அணியின் முன்னால் கேப்டனும், அதிரடி பேட்ஸ் மேனனான எம்.எஸ் தோனி தான். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கவாஸ்கருக்கு இந்த இடத்தில் பேட்டிங் வராது… உண்மையை உடைத்த சக வீரர் கிரண்…!!

வலைப்பயிற்சியில் கவாஸ்கருக்கு பேட்டிங் சரியாக வராது என்ற ரகசியத்தை  அவருடன் விளையாடிய கிரண் மோரே கூறியுள்ளார் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் குவித்த இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கு வலைப்பயிற்சி அலர்ஜி என்ற ரகசியத்தை அவருடன் சேர்ந்து விளையாடிய கிரண் மோரே வெளிப்படுத்தியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய கிரண் மோரே, ‘‘நான் பார்த்தவரை வலை பயிற்சியில் மோசமான ஆடுபவர் கவாஸ்கர். அவருக்கு வலைப்பயிற்சியில் ஈடுபடுவது எப்பொழுதும் பிடிக்காது. அதில் மட்டும் அவர் எப்போழுதுமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியோடு சேக்காதீங்க….. இவர்களோடு சேருங்க…. அசால்ட் கொடுக்கும் பாபர் அசாம் ..!!

தன்னை கோலியுடன் ஒப்பிடாமல் அதற்கு மாறாக பாகிஸ்தான் ஜாம்பவான்களான ஜாவித் மியான்தாத் போன்றோருடன் ஒப்பிட்டால் நன்றாக உணர்வேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் விராட் கோலி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வரும் பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார்.  இவரை அந்நாட்டு ரசிகர்கள் விராட் கோலிக்கு இணையான வீரராக கட்டமைத்து உள்ளனர். இது குறித்து பேசிய பாபர் அசாம், “கோலியுடன் என்னை ஒப்பிடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதற்கு பதிலாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு கொரோனா இல்ல… முகமது ஹபீஸ் டுவிட்… குழம்பிப்போன சக வீரர்கள்..!!

பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் தாக்கு கொரோனா தொற்று இல்லை என ட்விட் செய்துள்ளார்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் 28ஆம் தேதி இங்கிலாந்து நடைபெற இருக்கும் 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை விளையாடுவதற்காக புறப்படும் நிலையில் அணியில் இருக்கும் வீரர்களுக்கு கிளம்புமுன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் மேற்கொண்ட பரிசோதனையில் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ், முன்னணி பேட்ஸ்மேன் ஜமான் உட்பட பத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்…? ஐபிஎல் தலைவர் என்ன சொல்கிறார்…?

ஐபிஎல் போட்டிகள் எப்போது நடைபெறும் என்ற சந்தேகத்திற்கு அதன் தலைவர் விளக்கமளித்துள்ளார் கொரோனா தொற்று பரவலை தடுக்க இந்தியாவில் தொடர்ச்சியாக ஊரடங்குஅமலில் இருந்து வருவதால் ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்து வருகின்றது. இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறியதாவது “செப்டம்பர், அக்டோபரில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது ஐசிசி முடிவிலேயே உள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை டி20 தொடரை ஐசிசி நடத்தாவிட்டால் அன்றைய தேதிகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி இல்லனா விராட் கோலி இல்ல – கெளதம் கம்பீர்

டிவி நிகழ்ச்சியில் உரையாடிய கௌதம் கம்பீர் தோனி இல்லை என்றால் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்திருக்கும் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக  எம்பியுமான கவுதம் கம்பீர் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் நிகழ்ச்சியில்  முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணனுடன் உரையாடியபோது கூறியதாவது. “2014ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு மேற்கொண்ட பயணம் எங்களுக்கு மிகவும் மோசமாகவே இருந்தது. நானும் அந்த தொடரில் விளையாடினேன் நிச்சயமாக தோனிக்கு அந்தத் தொடரில் பாராட்டுகளை நாம் தெரிவித்தாக வேண்டும். காரணம் நிறைய […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வஹாப் ரியாஸ், ஃபகர் ஜமான், இம்ரான் கான், முகமது ஹபீஸ், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியாகியுள்ளது. பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் அற்புதமானவர்…. பல சாதனைகளை முறியடிப்பதை பார்ப்போம்…!!

விராட் பல சாதனைகளை முறியடிக்க போவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் விராட் கோலி ஸ்டீவ் ஸ்மித் என இருவருமே களத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாகவே ரசிகர்களால் அறியப்படுகின்றனர். கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஸ்டீவ் ஸ்மித் 12 மாதங்கள் விளையாட்டில் இருந்து விலகி இருந்து பின்னர் மீண்டும் திரும்பிய போது அவருக்கு ஆதரவளித்த முக்கியமான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. ஸ்டீவ் ஸ்மித்தும் பல சமயங்களில் விராட் கோலியை வெகுவாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்கள் வாயில் என்ன இருக்கிறது – ரஹானேவை கலாய்த்த தவான்….!!

ரோகித் சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரஹானேவின் பதிவிற்கு, தவான் அடித்த கமென்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊரடங்கு காரணமாக, தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, ரோகித் சர்மா தன்னை நேர்காணல் எடுக்கும் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ‘ரோகித் ‌ என்னிடம் என்ன கேட்கிறார்? அதற்கு நான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகேந்திர சிங் தோணியே முழு காரணம்- மனம் திறந்த ஆல்ரவுண்டர் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு அதன் கேப்டனாக உள்ள மகேந்திர சிங் தோணியே காரணம் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ  கூறியுள்ளார். சமூகவலைத்தளம் ஒன்றின் நேரலையில் பேட்டியளித்த அவர் தனது அனுபவங்கள் என பல விஷயங்கள்  குறித்து பேசினார்.  தோனி குறித்து கூறுகையில், எந்த சூழ்நிலையிலும் சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் திறன் அவரிடம் காணப்படுவதாகவும் டுவைன் பிராவோ குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த ஆண்டுக்கான  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லை இலங்கையில் நடத்தலாம் ? – சுனில் கவாஸ்கர் யோசனை …!!

ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மாதம் இலங்கையில் வைத்து நடத்தலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை கூறியுள்ளார் மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா  காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முன்னாள் இந்திய அணியின் கேப்டனான சுனில் கவாஸ்கர் “வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஐபிஎல் நடத்த முடியாது. காரணம் அது பருவமழை காலம். அதனால் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையில் வைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களுக்கும் ஆர்வம் இருக்கு…. ஆனால் ரசிகர்கள், வீரர்கள் பாதுகாப்பு முக்கியம் – பிசிசிஐ

வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை பொறுத்தே இந்திய அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்குமா என்பது குறித்து தெரியவரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது ஆஸ்திரேலியாவில் இருக்கும் மைதானங்களில் அடுத்த மாதத்திலிருந்து ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்தார். இதனால் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்படும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமானது. இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில் “உலக கோப்பை தொடரில் பங்கேற்க மிகுந்த ஆர்வத்துடன் இந்திய அணியும் இருக்கின்றது. ஆனால் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி ஒரே ஆளு 11 பேருக்கு சமம் – ஐடியா கொடுத்த சக்லைன் முஷ்டாக் …!!

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட யுக்தி குறித்து பந்துவீச்சு ஆலோசகர் தெரிவித்துள்ளார் கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக், 2016 முதல் 19 உலக கோப்பை வரை இங்கிலாந்து அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆலோசகராக விளங்கியவர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை இங்கிலாந்த் சுழற்பந்து வீச்சாளர் வீழ்த்துவதற்கு பயன்படுத்திய யுக்தி குறித்து பேசியுள்ளார். “விராட் கோலியின் விக்கெட்டை ஒட்டுமொத்த இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்..!!

இந்தியாவின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி (Vasant Raiji) இன்று காலமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி. இவர் 9 முதல் தர போட்டிகளில் பங்கேற்று 277 ரன்கள் குவித்துள்ளார். மும்பை மற்றும் பரோடா அணிகளுக்காக தொடக்கம் கொடுத்தவர்.. சமீபத்தில் தன்னுடைய 100ஆவது பிறந்தநாளை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் ஆகியோருடன் சிறப்பாக கொண்டாடினார். […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை ஒத்திவைப்பு ?

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. இதற்கான திட்டமிடலும் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் , உலகெங்கும் உள்ள கொரோனா பாதிப்பு காரணமாக 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த ஒத்திவைப்பு குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே ஆள எதுக்கு வச்சுட்டு இருக்கீங்க….! அதுக்குன்னு தனி ஆள போடுங்க…! ஐடியா கொடுக்கும் கம்பீர்

டி20 வடிவிலான போட்டிகளுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், எப்போதும் வெளிப்படையான விமர்சனங்களைக் கூறுவதால், இவர் பேச்சுகள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும். இந்நிலையில், டி20 வடிவிலான போட்டிகளுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்கலாம் என ஆலோசனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ”டி20 வடிவிலான போட்டிகளுக்கு தனியாக ஒரு பயிற்சியாளரை நியமிக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் […]

Categories

Tech |