மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவானாக மட்டுமில்லாமல் மிக மர்மமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கிறார். ஐபிஎல் 2020 சீசனுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸை செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது போன்ற ஒரு பாணியில்தான் தோனி டெஸ்ட் போட்டியிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இத்தகைய பெரிய முடிவுகளை அவர் தொடர்ந்து எடுக்கும் நுட்பம் […]
