Categories
கிரிக்கெட் விளையாட்டு

Breaking: மிகவும் பிரபல RCB வீரருக்கு கொரோனா… பெரும் அதிர்ச்சி….!!!

சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஆர்சிபி அணியின் இளம் தொடக்க வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகுதான் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார்கள். அதுமட்டுமன்றி மைதானத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னது விராட் கோலி சிஎஸ்கே-வுக்கு விளையாடுராரா… வைரல்….!!!!

ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்து ட்விட்டர் நிறுவனம் விளம்பரப்படுத்தி உள்ளது. ஐபிஎல் போட்டி மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை விளம்பரப்படுத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு அணியின் எமோஜியுடன் ஹேஸ்டேக் போட்டு டுவிட் செய்திருந்தது. அந்தப் பதிவில் ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்திருந்தது. இதனை அனைவரும் கலாய்த்து வந்ததுடன் விராட் கோலி சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளதாக குறிப்பிட்டு வைரலாகி வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் வீரார்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது…. பிசிசிஐ உத்தரவு…!!!

உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகங்கள் எந்த வீரருக்கும் கொரோனா […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

Breaking: ஐபிஎல் அணி கேப்டன் திடீர் மாற்றம் – அதிரடி அறிவிப்பு…!!!

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால் புதிய கேப்டனாக பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால் புதிய கேப்டனாக பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யூசுப் பதானுக்கு கொரோனா … மற்ற கிரிக்கெட் வீரர்கள் பீதி…!!

கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அடுத்து சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சேஃப்டி கிரிக்கெட் தொடரில் இந்தியா legend’s அணி சார்பில் சச்சின், யூசுப் பதான் விளையாடிய நிலையில் இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற சக கிரிக்கெட் வீரர்கள் பீதியடைந்துள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 பேட்டிங் தரவரிசை…. விராட் கோலி முன்னேற்றம்..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இன்று வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நான்காம் இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி”… தமிழக வீரர் நடராஜன் டிவிட்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்ததில்பெரும் மகிழ்ச்சி அடைந்த தமிழக வீரர் நடராஜன் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாப்ப நாயக்கன் பட்டியில் ஏழ்மை நிலையில் நடராஜன் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட   நடராஜன் நண்பர்களின் உதவியுடன் மாவட்ட மற்றும் மாநில அளவிலான வாய்ப்பினை பெற்று விளையாடி வந்துள்ளார். தொடர்ச்சியாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரனான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி-20 தொடரில் ஜிம்பாப்வே தோற்கடித்த ஆப்கானிஸ்தான்…. அபார வெற்றி….!!

 3 வது டி -20 போட்டியில் ஜிம்பாப்வே அணியைத் தோற்கடித்து 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே என்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 வது  டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த தொடரில் முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணியும், இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டிலும் வெற்றி பெற்று தொடரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Behindwoods மேடையை கலக்கிய சுரேஷ் ரெய்னா… அப்படி என்ன செய்தார் தெரியுமா?… நீங்களே பாருங்க…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மேடையில் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தமிழகத்தில் behindwoodsgoldicons விருது வழங்கும் விழா கடந்த சில நாட்களுக்கு முன்னார்  நடைபெற்றுள்ளது. அந்த விழாவில்  திரைத்துறை, விளையாட்டு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் அந்த விழாவில் திரைத்துறை மற்றும் டிஜிட்டல் திரை சார்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர் .  அதன்படி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய நாள்… கிரிக்கெட் உலகையே உலுக்கிய மரணம்… பெரும் சோகம்…!!!

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கிரிக்கெட் பிரபலம் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய பால் உல்மர் கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக 2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்கு வகித்தார். எனவே 2007 […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

Breaking: கொரோனா எதிரொலி…. இந்தியா முழுவதும் ரத்து….. அதிரடி அறிவிப்பு …!!

  சீனாவின் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்தது. ஏறக்குறைய ஒன்றேகால் வருடங்கள் உலக நாடுகளை திணற வைத்த கொரோனா சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க துவங்கியுள்ளது. இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த தொற்று தற்போது அதிகரித்தது அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுதும் நடைபெற உள்ள அனைத்து விதமான உள்ளூர் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெறும் டி20 போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லாதவாறு போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி ரசிகர்களுக்கு SHOCK…. வெளியான புகைப்படம்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட்டில் இருந்து கடந்த வருடம் ஜூலையில் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் தன்னுடைய வீட்டு தோட்டத்தில் விவசாயியாக மாறி அசத்தி வந்தார். கேப்டன் கூல் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கபடுபவர் தோனி. இதையடுத்து தற்போது ஐபிஎல் தொடருக்காக சென்னையில் வலைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் மொட்டை அடித்து துறவி போன்று ஆடை அணிந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. 2011ம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே ஓவரில் 6+6+6+6…. யுவி மாஸ் ஆட்டம்…. வைரலாகும் வீடியோ..!!

தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய போது யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சாலை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 24 ரன்களை குவித்தது சச்சின் 60 பத்ரிநாத் 42 யுவராஜ்சிங் 52 ரன்களை குவித்தனர் இதில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் தொடர்ந்து 6+6+6+6 என்று 4 சிக்சர்களை பறக்க விட்டுக் எடுத்துக்காட்டினார். https://www.youtube.com/watch?v=mGrvfRAru2g

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி திணறல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைப்பதன் காரணமாக இன்றைய போட்டி பரபரப்பில் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டி20 போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. 7 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடேங்கப்பா”ஐபோன் நொறுங்கும் அளவுக்கு…. வெறித்தனமா பயிற்சி எடுக்கும் வீரர்…. வைரலாகும் வீடியோ…!!

ஐபோன் நொருங்கும் அளவுக்கு வெறித்தனமா பயிற்சி இருக்கிற எடுக்கிற ஏபி டிவிலியர்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா வீரரான 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஏபி டிவில்லியர்ஸ். இவர்  நீண்ட காலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணியின் சார்பாக விளையாடி வருகின்றார். அந்த வகையில்  இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான வலைப் பயிற்சியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“வாத்தி கம்மிங்” பாடலுக்கு ஆடி அசத்தும் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி…. வைரலாகும் வீடியோ…!!!

மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடல் வெளியானது முதல் இன்று வரை ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தந்தைக்கு போட்ட மீம்ஸ்” தரமான பதிலளித்த வாஷிங்டன் சுந்தர்…. வைரலாகும் ட்விட்…!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரின் மீம்ஸ்-க்கு தரமான கருத்து தெரிவித்த வாஷிங்டன் சுந்தரின் பதில் வைரலாகி வருகின்றது. இந்தியா –  இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் போது இந்திய அணியின் வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும்  வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடியுள்ளார்.இதில் ரிஷப் பண்ட் சதமடித்து அதன்பின் அவுட்டாகி உள்ளார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களை எடுத்து இறுதிவரை நின்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடிக்கும் பந்தெல்லாம் சிக்ஸர்… யோகி பாபுவின் கிரிக்கெட் திறமை…. குவியும் லைக்ஸ்…!!

யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையைப் பாராட்டி ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகி பாபு. அதன்பின் கோலமாவு கோகிலா, கூர்கா, கோமாளி உள்ளிட்ட பல படங்களை நடித்த யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். தற்போதும் அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வலைதள பக்கத்தில் தான் கிரிக்கெட் ஆடும் வீடியோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி பண்ணுறது சிறுபிள்ளைத்தனம்…! உண்மையில் தோற்று விட்டார்… கடுப்பேத்திய முன்னாள் வீரர் …!!

இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலி டக் அவுட் ஆனதை இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர் விமர்சனம் செய்துள்ளார். அகமதாபாத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து – இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இன்னிங்சில் 205 ரன்கள் பெற்று இங்கிலாந்து ஆல் அவுட் ஆகியது. இதையடுத்து ஆடிய இந்திய அணியின் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆட்டத்தால் 365 ரன்களை எடுத்தது வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங் செய்யும் போது  இங்கிலாந்து வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Flash News: ஐபிஎல் போட்டி… ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு ஆடுகளத்தில் அனுமதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2021 போட்டிகளுக்கான அட்டவணை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான இந்திய தொடர் முடிந்த பின் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை ஐபிஎல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

BREAKING: இந்திய அணி அபார வெற்றி… பைனலில் நியூசிலாந்துடன் மோதல்…!!!

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 135 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அக்சர், அஸ்வின் தலா 5 விக்கெட் வீழ்த்தினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND v ENG: 3 -1 ”இங்கிலாந்தை” அடிச்சி தூக்கி ”இந்தியா வரலாற்று” வெற்றி …!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் 89 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அதன்படி வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களமிறங்கினர். தொடர்ந்து அபாரமாக இந்த இணை அணியின் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்தியது. அதன்பின் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் பட்டேல் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிப்ரவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு அஸ்வின் தேர்வு…!!

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் உட்பட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர் வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கும் முறையை ஐசிசி அண்மையில் கொண்டுவந்தது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கையில் மேயஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“யாரோ கோபப்படுகிறார்கள்” குறிப்பிட்ட இந்திய வீரர் ரிஷப் பண்ட்…. வைரலாகும் வீடியோ…!!

இந்தியா – இங்கிலாந்து அணியின்  4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரரை குறிப்பிட்டு ரிஷப் பண்ட கூறிய வார்த்தை வைரலாகி வருகின்றது.. இந்தியா – இங்கிலாந்து அணி 4 வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி மதிய இடைவேளை வரை 74 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாக் க்ராவ்லி 9 ரன்களிலும், சிப்லி 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது வேற லெவல் மச்சி – 6 + 6 + 6 + 6 + 6 + 6…!!

முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி  பெற செய்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன ஒரு எளிமை…. சாலையோர கடையில் ஆல் ரவுண்டர்…. வைரலாகும் காணொளி…!!

சூரத்திலுள்ள சாலையோர கடையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியா உணவு உண்ட காட்சி இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியா,விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளார். மேலும் இவர் பரோடா அணியின் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாத வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஊருக்கு திரும்பிய குர்னால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பணத்திற்கு தன் முக்கியத்துவம்”…. ஐபிஎல் ஆடினால் எனக்கு கிரிக்கெட் மறந்துவிடும்…. மன்னிப்பு கேட்ட வேகப்பந்துவீச்சாளர்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தை விட பணத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது என்று டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலும் விளையாடி வருபவர் டேல் ஸ்டெய்ன். இவர் நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். மேலும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை பணத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது. அங்கு எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்?, ஏலம் எவ்வளவு பணம் எடுக்கலாம்? என்பதுதான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டநாயகனுக்கு 5 லிட்டர் பெட்ரோல்”…. கிரிக்கெட் தொடரில் நடந்த…. சுவாரசிய சம்பவம்…!!

மத்தியபிரதேசத்தில் ஆட்டநாயகன் விருதை வென்ற கிரிக்கெட் வீரருக்கு பரிசாக 5லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகின்றது. கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் கரூரில் பெட்ரோல்பங்க் உரிமையாளர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளுவர் தினத்தன்று பிழையில்லாமல் திருக்குறள் சொல்லியவர்களுக்கு  ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கியுள்ளார். இதையடுத்து பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து  பெட்ரோல் பங்கில் ஒருவர் கிரிக்கெட் மட்டை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் தொடரில்…. இவர்கள் மூவருக்கு ஓய்வு…. வெளியான தகவல்…!!

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையே நடைபெறும் ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் மூவருக்கு ஓய்வு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் மார்ச் 4 அன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை யடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன் பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் மார்ச் 23 அன்று பூனேவில் நடைபெற உள்ளது. இந்நிலையில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் எப்போதும் பெஸ்ட் தான்…. தன்னம்பிக்கையுடன் களம் இறங்கும் கிறிஸ் கெயில்…!!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான 14 பேர் கொண்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 41 வயதான கிறிஸ் கெயில் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறியதாவது, “ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் கஷ்டத்தை புரிந்துகொண்டார்…. விராட் அணியில் மேக்ஸ்வெல்…. இத்தனை கோடி கொடுத்து வாங்கினாங்களா…?

ஐபிஎல் 2021-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆஸ்திரேலியா வீரர் க்ளன் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் 14 வது சீசன் நடைபெற இருக்கும் நிலையில் இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக விராட் கோலி பொறுப்பேற்றார். இந்த அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான கிளன் மேக்ஸ்வெல்லை 14.25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. 2020 ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடியதாக கூறி பஞ்சாப் கிங்ஸ் அணி மேக்ஸ்வெல்லை வெளியேற்றியுள்ளது. ஆனால் இப்போது ராயல் […]

Categories
விளையாட்டு

“500 முதல் 1000 விக்கெட்டுகள்” அகமதாபாத் பிட்ச்க்கு…. கருத்து தெரிவித்த யுவராஜ்சிங்…. பதிலளித்த கௌதம் கம்பீர்…!!

இந்தியா – இங்கிலாந்து அணியின் நடந்து முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் பிட்ச் பற்றி யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளனர். அகமதாபாத் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து  அணியின் இரண்டு நாட்கள் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீசியுள்ளார். மேலும் நடந்து முடிந்த இந்த டெஸ்ட் போட்டியில் அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் சரியில்லை என்றும், இதில் ஹர்பஜன்சிங் அல்லது அணில் கும்ப்ளே ஆகியோர் பந்துவீசி இருந்தால் 800 முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோப்பையை கைப்பற்றனும்”…. வாழைப்பழத்தியில் எழுதி…. ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரசிகர்கள் வழிபாடு…!!

 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற ரசிகர்கள் வழிபாடு செய்துள்ளனர் . ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 13 தொடர்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த 13 போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு தடவை கூட வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதே இல்லை. இந்த அணி ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறுகின்றது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மதம் நடைபெற உள்ள ஐபில் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய பிச்சுகள் மோசமா இருக்கு” குறைகூறும் இங்கிலாந்து வீரர்கள்…. “அப்படி ஒன்னும் தெரியலையே” ஆதரவளித்த ஆப்கானிஸ்தான் வீரர்….!!

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் இந்தியா பிச்சுகள் மோசமானது என முன்னாள் வீரர்கள் குறை கூறி வருகின்றனர் . இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் சென்னை மற்றும் அகமதாபாத் பிட்சுகள் மோசமானதாக இருந்ததாகவும். அதுவே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்ததால் இந்திய அணி வெற்றி பெற்றதாகவும் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னாள் வீரர் டவுல் கேலி… உங்களுக்கு இது தேவையில்லாத பேச்சு… பதிலடி கொடுத்த டேல் ஸ்டெயின்..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டின் டேல் ஸ்டெய்னை கேலி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த வெள்ளிகிழமை அன்று டேல் ஸ்டெயின் விளையாடியுள்ளார். அப்போது அவர் பந்துவீசி 2 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். கிரிக்கெட் விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டவுல் ஸ்டாய்னின் முடி அமைப்பை பற்றி மனம் புண்படும்படி கேலி செய்துள்ளார். இந்தப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல் 2021” எந்தெந்த மைதானத்தில் நடக்கும்…. பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!

ஐபிஎல் போட்டிகளை எந்தெந்த மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற முடிவினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியின் 14 வது சீசனிற்கான ஏலம் நடந்து முடிந்தது. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இதுவரை ஒவ்வொரு அணியும் தனது சொந்த மைதானத்தில் ஏழு போட்டியிலும் வெளி மைதானத்தில் 7 போட்டிகளிலும் விளையாடுவார்கள். ஆனால் தற்போது பிசிசிஐ 6 மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.அவை சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகும். மேலும் மும்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மோடி ஸ்டேடியம் மீது புகார் ? இங்கிலாந்து அணி திடீர் முடிவு …!!

மிக அரிதாக இரண்டே நாளில் டெஸ்ட் போட்டி முடிவுக்கு வித்திட்ட அகமதாபாத் ஆடுகளம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளிக்க இங்கிலாந்து அணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது . உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கு என்ற பெருமையை பெற்றுள்ளது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம். இங்கிலாந்திற்கு எதிராக இந்த அரங்கில் நடைபெற்ற பகல் –  இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினர், சுழலின் எங்களை அடித்துக்கொள்ள யாரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க முடியாது… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோணா பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASHNEWS: மிகப்பெரிய இந்திய கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு…!!

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தன்னுடைய ஒய்வு அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவுக்காக 2 உலக கோப்பையை பெற்று தந்த அணியில் இருந்தது மறக்க முடியாது. தோனியின் தலைமையில் என் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி நம் நாட்டிற்காக விளையாட வாய்ப்பளித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அதிக சிக்சர்களை அடித்து”…. சர்வதேச டி20 தொடரில்…. சாதனை படைத்த வீரர்…!!

நியூசிலாந்தை சேர்ந்த மார்டின் கப்தில் சர்வதேச டி20 தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 127 சிக்சர்களை அடித்து இந்திய அணியின் அதிரடி வீரர் ரோகித் சர்மா முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது அதனை முறியடித்த கப்தில் 132 சிக்சர்களுடன் முதலிடம் பிடித்திருக்கின்றார். கடந்த சில தினங்களாக நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நியூசிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ஜோ ரூட் அசத்தல்…! வெறும் 37க்கு 7விக்கெட்” இந்தியா 145ரன்னில் ஆல் அவுட் …!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே மொட்டேரோ நடைபெற்று பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. இன்று (பிப். 25) இரண்டாம் நாள் ஆட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னாள் வீரர்களுக்கு ரோகித் சர்மா பதிலடி …!!

வீரர்களின் திறனை பார்க்கவேண்டுமே தவிர பிட்சை குறித்து விவாதிப்பது தேவையற்றது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சரமாரியாக பேசியுள்ளார் . சென்னை பிட்ச் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும்,  பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாத வகையில் மோசமாக இருந்ததாகவும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்து இருந்தனர். இது குறித்து பேசிய ரோகித் சர்மா, பிட்ச் இரு அணிகளுமே பொதுவாகவே தயார் செய்யப்பட்டதாகவும்,  ஏன் இதைப்பற்றி விவாதிக்கப்படுகிறது ?  எனவும் தெரியவில்லை எனவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர்…. திடீர் ஒய்வு அறிவிப்பு…!!

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நான் மேற்கொண்ட பயணத்தில் இருந்து தற்போது நான் ஓய்வு பெறுகிறேன். என்னுடைய எல்லா நிலைகளிலும் ஆதரவாக இருந்த என்னுடைய ரசிகர்களுக்கும், என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த திடீர் ஒய்வு அறிவிப்பால் அவருடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குழந்தையுடன் குளியல் போடும் ஹர்திக் பாண்டியா…. வெளியான கியூட் போட்டோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா தனது குடும்பத்துடன் குளியல் போடும் கியூட் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார்.  காயத்திற்கு பின்பு ஹார்திக் பாண்டியா இன்னும் முழுமையாக பந்துவீச்சில் ஈடுபடவில்லை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி உலகின் மிகப் பெரிய மைதானம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்… WOW… வைரல் புகைப்படம்…!!!

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்தியா அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அந்த அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் ஆகிய மூன்றிலும் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பியபோது பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பல வருஷம் காத்திருந்ததற்கு கிடைத்த பலன்…2 வருஷத்துக்கு முன்னால் பதிவிட்ட கமெண்ட்… வைரலாகும் பதிவு…!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படாததால் எழுந்த கமெண்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது. மும்பையை சேர்ந்த 30 வயதான கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் ஆவார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்சில் விளையாடி 480 ரன்களைக் குவித்தார். ஆனால் அப்போது ஆஸ்திரேலியா அணிக்கு நடைபெற்ற தொடரில் இவர் தேர்வாகவில்லை.இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அப்போது சூர்யகுமார் யாதவ் இதுகுறித்து கூறியதாவது, ஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்காக இந்திய அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரால் எழுந்த சர்ச்சை… “வாரிசு”என்ற வார்த்தை நியாயமற்றது… பிரபல பாலிவுட் நடிகர் கருத்து…!

கிரிக்கெட் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அர்ஜுன் டெண்டுல்கரை கீழே தள்ளி விடாதீர்கள் என பிரபல பாலிவுட் நடிகர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் சமீப காலத்திற்கு முன் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நடை பெற்றது.அதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம் பெற்றிருந்தார். 21 வயதான அர்ஜுனுக்கு ஆரம்ப விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் பின் அவருடைய ஏலம் தொடங்கிய போது எந்த அணிகளும் அவரை எடுக்கவில்லை. அதனால் ஆரம்ப விலையின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா இல்லாதிருந்தால்…. தோனி விளையாடியிருப்பார் – சரந்தீப் சிங்…!!

உலகம் முழுக்க கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து கொரோனா இடைவெளி இல்லாது இருந்தால் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ ஆம் வெயிட்டிங்…! எல்லாருக்கும் நன்றியோ நன்றி…. நெகிழ்ந்து போன சச்சின் மகன் …!!

ஐபிஎல் 2021 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின்டெண்டுல்கர்  மகன் அர்ஜூனை ஏலத்தில் எடுத்துள்ளனர். ஐபிஎல் 2021 சீசன்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி வீரராக சச்சின் டெண்டுல்கரின் மகனாகிய அர்ஜுனை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். இதுகுறித்து அர்ஜுன் பேசுகையில், அவர் சிறுவயதிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன்,  என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளருக்கும், சப்போர்ட் ஸ்டாப்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிவதற்கு […]

Categories

Tech |