Categories
உலக செய்திகள்

கிரிக்கெட் விளையாடும் இலங்கை ஜனாதிபதி.. இணையத்தளத்தில் வைரலான புகைப்படங்கள்..!!

இலங்கையின் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சே மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையின், இராணுவம் 72-ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி, அநுராதபுரம் கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சே பங்கேற்றார். அப்போது, கிரிக்கெட் மைதானத்தை அவர் திறந்து வைத்தார். அதன்பின்பு, அந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அப்போது, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான, திஸாரா பெரேரா வீசிய பந்தை ஜனாதிபதி புன்னகையுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மரண அடி வாங்கி சறுக்கல்…! 6ஆம் இடத்தில் மும்பை…. மைனஸில் ரன் ரேட்….!!

கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி 4ஆம் இடத்தில இருந்து 6ஆம் இடத்திற்கு சென்றது. நேற்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் நான்காவது இடத்தில் இருந்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆறாவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 55 ரன்னும், ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் அணிக்கு மிரட்டல்…. இந்தியா மீது குற்றசாட்டு…. வம்பிழுக்கும் பாகிஸ்தான் …!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள்  இடையேயான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் களம் இறங்காமலே நியூசிலாந்து அணி நாடு திரும்பியது. இந்நிலையில் பாகிஸ்தான் தொடரை நியூஸிலாந்து ரத்து செய்ததற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ருத்ரதாண்டவ ஆட்டம்…! கதறவிட்ட வெங்கடேஷ், திரிபாதி…. சல்லிசல்லியா சிதைந்த மும்பை …!!

ஐபிஎல்லில் நேற்று மும்பை – கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 2021 தொடரின் 34 வது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க […]

Categories
உலக செய்திகள்

இதற்கெல்லாம் இந்தியா தான் காரணம்…. ரத்து செய்யப்பட்ட போட்டி…. குற்றம் சாட்டிய பாகிஸ்தான்….!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் நாட்டுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்துவிட்டு தங்களது நாட்டிற்கு சென்றதற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் நாட்டுடன் விளையாடுவதற்காக அங்கு சென்றுள்ளார்கள். ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடனான தொடரை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துவிட்டு தங்களது நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியா மீது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா… போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்… ஐபிஎல் நிர்வாகம்!!

 ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.. புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது பட்டியலில் உள்ள டெல்லி அணியும், 2 புள்ளிகளில் கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி யும் மோத இருக்கின்றன.. இந்த நிலையில் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டி ஊதியம் உயர்வு…. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு….!!!

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தி இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி 40 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ள மூத்த வீரர்களுக்கு போட்டி ஊதியம் 60 ஆயிரம் ஆக உயர்த்தப்படுகிறது. 23 வயதிற்கு உட்பட்ட வீரர்களின் போட்டி ஊதியம் 25 ஆயிரம் ஆகவும், 19 வயதுக்குட்பட்ட வீரர்களின் கட்டணத்தை 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். வீரர்களுக்கு நாளொன்றுக்கு இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே கிரிக்கெட் […]

Categories
விளையாட்டு

சென்னையோடு மல்லுக்கட்டும் மும்பை…. ரோஹித் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சி …!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசன் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து அதன்படி, துபாய், சார்ஜா, அபுதாபி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது சீசன் போட்டியின் முதல் ஆட்டம் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயங்கரவாத அச்சுறுத்தல்…. ஒருநாள், டி-20 தொடர் ரத்து…. திடீர் அறிவிப்பு….!!!

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒருநாள் டி20 தொடர் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சென்று உள்ள நியூசிலாந்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து வீரர்கள் அது பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டி20 தொடரை ரத்து செய்த நியூசிலாந்து தனி நாடு திரும்புகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BIG NEWS: தோனி போல முடிவெடுத்து….. கேப்டன் பொறுப்பில் கோலி விலகல்…. புதிய கேப்டனாக ரோஹித் ?

கடந்த சில தினங்களாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பரவலாக பரபரப்பாக பேசப்பட்ட விவகாரத்தை தற்போது இந்திய கேப்டன்  உறுதி செய்திருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து அவர் தற்போது விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அடுத்த மாதம் துபாயில் நடைபெறக்கூடிய t20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்பு கோலி கேப்டன் பதவியில் இருந்து  விலகுகின்றார். 50 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் தொடருவார்  என்றும் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும்… ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மலிங்கா…!!!

இலங்கை அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச போட்டியில் இருந்தும், டி20 போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா. இவரின் துல்லியமான பந்துகள் எதிரே நிற்கும் பேட்ஸ்மேனை கலங்கவைக்கும். குறிப்பாக எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதற்கு, இவர் வீசும் பந்துகள் அணியின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். 30 டெஸ்டுகள், 226 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக 2020 மார்ச்சில் இலங்கை அணிக்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

India vs England 5வது டெஸ்ட் ரத்தானது ஏன்?…. பிசிசிஐ விளக்கம்….!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி இன்று மாலை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பிசிசிஐ உடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தியஅணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பே 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒய்வு…. ரசிகர்கள் ஷாக்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 -16 ஆண்டுகளுக்கு இடையே 6 டெஸ்ட், 14 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014 இல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் 4.4 ஓவர்களில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த திடீர் ஓய்வு அறிவிப்பால் அவருடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரவிக்குமார், பஜ்ரங் பூனியாவுக்கு…. ரெனால்ட் கார் பரிசு…!!!

ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றுள்ளது. இவ்வாறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்ற ரவிக்குமார் மற்றும் வெண்கலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்…. பிசிசிஐ அறிவிப்பு…!!!

தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்க் பயிற்சியாளர்களுக்கு  தகுதியானவர்கள் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த பதவிக்கு சேவாக் உள்ளிட்ட முன்னணி வீரர்களும், ஏற்கனவே பொறுப்பில் இருந்த பயிற்சியாளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது சீட்டிங்… நான் ஏத்துக்கவே மாட்டேன்…. பும்ராவிடம் ஆவேசமாக பேசிய ஆண்டர்சன்……!!!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஐந்தாம் நாளில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேனான ஆண்டர்சனுக்கு பும்ரா தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசி அச்சுறுத்தினார். இந்நிலையில் பவுன்சர் பந்துகளை எதிர்கொண்ட பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திரும்ப வருகிறாரா ஸ்டோக்ஸ்…? பயிற்சியாளர் பதில்…!!!

இந்தியா உடனான 2வது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாடுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், ஸ்டாக்ஸை அணிக்கு திரும்பி வரச் சொல்லி நிர்பந்திக்க மாட்டோம். அவரே வந்து நான் விளையாட தயார் என்று சொல்லும் வரை நாங்கள் காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருவரிடம் மோதினால் 10 பேரிடம் மோதின மாதிரி…. கே.எல்.ராகுல் பேட்டி…..!!!!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 முதல் 16 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா பேட்டிங் செய்தபோது, மார்க்வுட் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து  பேசிய கே.எல்.ராகுல், “இரு பலமான அணிகள் மோதும்போது, இதுபோன்ற சீண்டல்கள் நடப்பது சகஜம்தான். போட்டியின்போது இதுபோன்ற வார்த்தை மோதலில் ஈடுபடுவது எங்களுக்குப் பிடிக்கும். எங்கள் அணியில் நீங்கள் ஒருவரை சீண்டினால், நாங்கள் 11 பேரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி-20 உலகக்கோப்பை தொடர்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

டி20 உலக கோப்பை தொடர் கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்தப்பட இருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது பாதிப்பு சற்று குறைந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை தொடரில், குரூப் 2 பிரிவில் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஓமன், அபுதாபி, சார்ஜியாவில் நடக்கும் டி20 தொடருக்கான அட்டவணையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து வீரர்களுக்கும்…. இந்திய வீரருக்கும் மோதல்… தலையில் பலமாக அடி….!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது பும்ரா தொடர்ந்து பவுன்ஸ் பந்துகளை வீசியதால் ஆண்டர்சனுக்கு அடிபட்டது. இதனை மனதில் வைத்து கொண்டு இங்கிலாந்து வீரர்கள் பும்ரா பேட்டிங் செய்யும்போது அவரை கட்டம் கட்டி பவுன்ஸ் பந்துகளை வீசினார்கள். இதனால், பட்லருக்கும், பும்ராவுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மார்க் வுட் வீசிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு அறிவித்த…. பிரபல கிரிக்கெட் வீரர்…!!!

2019இல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தலைமை தாங்கிய உன்முக்த் சந்த் ஓய்வை அறிவித்துள்ளார். ஒரு காலத்தில் விராட் கோலிக்கு நிகராக பேசப்பட்ட இவர் ரஞ்சி கோப்பை, ஐபிஎல் என எதிலும் எதிர்பார்த்த அளவு சாதிக்கவில்லை. பல முறை தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக கூறிய இவர் பிற  நாடுகளில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Big News: உயிருக்கு போராடும் பிரபல கிரிக்கெட் வீரர் – பெரும் சோகம்…!!!

நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ் கெய்ர்ன்க்கு திடீரென்று இதயத்தில் கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ செய்து…. வரலாறு படைத்த வங்கதேசம்…!!!

ஆஸ்திரேலியா எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் பேட்டிங்க் செய்த வங்கதேசம் 127/9 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 117/4 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம்  5 போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேசம் 3-0 என்ற கணக்கில்(முன்னிலை) வென்றது. முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வங்கதேசம்  வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வந்ததும் நடையை கட்டிய கோலி – மோசமான சாதனை…!!!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதல் பந்திலேயே ஆண்டர்சன் பந்து வீச்சில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை(9 முறை ), டக் அவுட்டான  இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் தோனி 8 முறை, பட்டோடி 7 முறை,  கபில் தேவ் 6 முறை கேப்டனாக டக்-அவுட்டாகி உள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: அடித்து ஓட விட்ட இந்திய அணி…. கொண்டாட்டம்….!!!!

இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் என நான்கு வேகங்கள் சேர்க்கப்பட்டனர். சுழலில் ஜடேஜா மட்டும் இடம் பெற்றார். இங்கிலாந்து அணி விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிக பிரபல CSK வீரர் ஒய்வு அறிவிப்பு…. ரசிகர்களுக்கு அதிர்ச்சி…!!!

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டி மழையால் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெயின் பிராவோ அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டி தான் சொந்த மண்ணில் அவரது கடைசி சர்வதேச டி20 போட்டி ஆகும். பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 86 டி20 போட்டிகளில் 1,229 ரன்கள், 76 விக்கெட் எடுத்துள்ளார். இந்நிலையில் வெயின் பிராவோ ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிக பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் அறிவிப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காலவரையறையற்ற விடுப்பில் செல்வதாக அறிவித்துள்ளார். இதனால் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் வீரர்களின் மன ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி தான் காரணம்…. பிரபல கிரிக்கெட் வீரர் கொடுத்த ஷாக்…!!!!

இந்திய முன்னாள் கேப்டன் தோனியால் தான் தன்னுடைய வாய்ப்பு பறிபோனது என பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். தனக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை. மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த வேளையில் தோனியின் வருகை அனைத்தையும் மாற்றி விட்டது. அவர் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இரண்டுமாக இருந்தார் என கூறியுள்ளார்.

Categories
மற்றவை விளையாட்டு

மீராபாய் சானுவுக்கு ரூ.2 கோடி பரிசு…. பதவி உயர்வு…. வெளியான தகவல்…!!!

ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர் மீராபாய் சானு. இவர் இந்திய ரயில்வே துறைக்கு விளையாடியவர். இந்நிலையில் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசுத் தொகையையும், பதவி உயர்வும் வழங்கப்பட இருக்கிறது என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Exclusive: தோனி ரிட்டன்ஸ் – இந்திய அணி ஜெர்சியில்…. வா தல…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த வருடம் திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதையடுத்து தற்போதுள்ள இந்திய வீரர்கள் அணிந்துள்ள ரெட்ரோ கிட் ஜெர்சியை தோனி அணிய முடியவில்லையே என்று வருத்தப்பட்டனர். இந்நிலையில் விளம்பரப் படத்திற்காக தோனி இந்திய அணியின் ரெட்ரோ கிட் ஜெர்சியை அணிந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போதைய டிரெண்டிங்கில் தோனி தான் நம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடர் அறிவிப்பு: முதல் போட்டியில் CSK vs MI மோதல்…!!!

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-19 ஆம் தேதியில் இருந்து மீண்டும் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 10  குவாலிபயர்-1 , அக்டோபர் 11 இல் எலிமினேட்டர், அக்டோபர் 13 இல் குவாலிபயர், அக்டோபர் 15ல் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

மொட்டை மாடியில் தனியாக கிரிக்கெட் விளையாடும் கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் வீடியோ…!!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களையும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நானும் பிராமணன் தான்”… ரெய்னாவை தொடர்ந்து ஜடேஜா சர்ச்சை…!!!

டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 தேதி தொடங்கியது. முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கு நடுவே வர்ணனையின் போது வீடியோ கால் வழியாக சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டு பேசினார். அப்போது வர்ணனையாளர் ஒருவர் “தென் இந்திய கலாச்சாரத்தை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள். வேட்டி கட்டுவது, நடனமாடுவது மற்றும் விசில் அடிப்பது போன்றவற்றை எப்படி கற்றுக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டு வந்த ரிஷப் பண்ட்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த  இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனால் அணியில் இருந்து விலகி 20 நாட்களுக்கு தனிமைப்படுத்தபட்டார். இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்தார். அவரை சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இவருக்கு பதிலாக பயிற்சி ஆட்டத்தில் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று துவங்குகிறது ‘தி ஹன்டர்ட்’ கிரிக்கெட்… வெளியான தகவல்…!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு நடத்தும் தி ஹன்டரட் போட்டி இன்று துவங்குகிறது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 100 பந்துகள், ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகள் வீசலாம், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ந்து 5 பந்தோ, 10 பந்து வீசலாம் என பல புதிய நடைமுறைகள் இந்த போட்டியில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியின் பெண்களுக்கான முதல் ஆட்டம் இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகின்றது. இந்த தி ஹன்டரட் ரூபாய் 59 கொடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பண்ட்க்கு கொரோனா உறுதி…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் அணியில் இருந்து விலகி 20 நாட்களுக்கு தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரிஷப் பண்ட முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இவர் சமீபத்தில் லண்டனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரை பார்க்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: தோனி விலகினால் IPL-ல் இருந்து விலகுவேன்…. பிரபல வீரர் அதிர்ச்சி….!!!!

பிரபல இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) பற்றிய ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. தல தோனி என்னும் எத்தனை வருடங்களுக்கு ஐபிஎல் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை (MS Dhoni’s cricket career) குறித்து பேசியுள்ளார். தோனி இப்பவும் ழு உடற்தகுதியுடன் இருப்பதால் சென்னை அணிக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: CSK-வில் தோனி – சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

மகேந்திரசிங் தோனி ஐபிஎல் போட்டியில் சென்னையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்வார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,  தோனி விளையாட தகுதியுடன் இருப்பதாகவும், அவரை அணியில் இருந்து விடுவிக்க காரணம் ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

புதிய இங்கிலாந்து அணி அறிவிப்பு.. கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் களமிறங்குகிறார்..!!

இங்கிலாந்தின் வீரர்கள் மூவருக்கும், அணி நிர்வாகிகள் நான்கு பேருக்கும் கொரோனா ஏற்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அணியானது, இங்கிலாந்தில் ஒருநாள் போட்டி 3 மற்றும் டி20 போட்டிகள் உடைய தொடர்களில் ஆடுகிறது. எனவே அங்கு தனிமைப்படுத்துதலுக்கு பின்பு தற்போது பாகிஸ்தான் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளது. அப்போது போட்டிக்கு முன்பாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இங்கிலாந்து வீரர்கள் மூவருக்கும், நிர்வாகிகள் 4 பேருக்கும் கொரோனா இருந்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டனாக உலக சாதனை படைத்த மிதாலி ராஜ்… குவியும் பாராட்டு…!!!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் பெறுகிறார். இதையடுத்து இவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக தான் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். மிதாலி ராஜ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்றதிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் போட்டியில் மயங்கி விழுந்த 2 வீராங்கனைகள்…. அதிர்ச்சி….!!!

ஆண்ட்டிகுவாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 சர்வதேச போட்டியின் போது மே.இ.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியின் சினெல் ஹென்றி மற்றும் செடியன் நேஷன் என்ற இரு வீராங்கனைகள் அடுத்தடுத்து மைதானத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் சினெல் ஹென்றி மயங்கி விழ அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். 10 நிமிடங்களுக்குப் பிறகு செடியன் நேஷன் என்ற வீராங்கனையும் மயங்கி விழுந்தார், இவரையும் ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இப்போது உடல் நிலை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியீடு…. வெளியான அறிவிப்பு…!!!

இந்திய அணியின் போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டி20 உலகக் கோப்பையை முதலில் இந்தியாவில் நடத்துவதற்கு ஐசிசி முடிவு செய்திருந்தது. அதன்படி, 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்த உலகக் கோப்பை t20 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அக்டோபர் 17-ம் தேதி முதல்… டி20 உலகக் கோப்பை போட்டி… ஐசிசி அறிவிப்பு….!!!

அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டி20 உலகக் கோப்பையை முதலில் இந்தியாவில் நடத்துவதற்கு ஐசிசி முடிவு செய்திருந்தது. அதன்படி, 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்த உலகக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டியில் பரபரப்பு…..!!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர்களை பார்வையாளர்கள் இரண்டு பேர் இன ரீதியாக விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய வீரர்கள் இனரீதியாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது நியூசிலாந்து வீரர்களும் விமர்சிக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட…. முன்னாள் கிரிக்கெட் வீரர்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். பரவலை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் தன்னுடைய இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய ட்விட்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC FINAL… மழையால் ஆட்டம் நிறுத்தம்… வெளியான தகவல்…!!!

மழையின் காரணமாக இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை சாம்பியன் டெஸ்ட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று மோதியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 35 ரன்கள், ரகானே 13 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மழையால் ரத்தான ஆட்டம் -இன்று நடத்த ஐசிசி திட்டம்…!!!

இந்தியா- நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடாத நிலையில் மழையால் முழுவதும் ரத்தானது.  இந்நிலையில் இன்று மழை பெய்யாமல் இருந்தால் போட்டியை திட்டமிட்டபடி நடத்தஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் பகுதி மதியம் 3 – மாலை 5 மணி, உணவு இடைவேளைக்குப் பின் இரண்டாவது பகுதி 5.40 – இரவு 7.40 வரை நடத்தலாம் என்றும், தேநீர் இடைவேளைக்குப் பின் மூன்றாவது பகுதி ஆட்டத்தை 8 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூ.12 கோடி பரிசு – ஐசிசி அதிரடி அறிவிப்பு…!!!

முதன்முறையாக நடத்தப்படும் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 12 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற ஐசிசி அறிவித்துள்ளது. தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்த இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தண்ணீர் குடிங்க” கோக்க கோலாவுக்கு “நோ” சொன்ன ரொனால்டோ…!!!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹங்கேரிக்கு எதிரான யூரோ ஆட்டத்தை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த பாடல்களை ஒதுக்கி வைத்துவிட்டு “கோக்கோகோலா வேண்டாம்” தண்ணீர் குடிங்க என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து உயர்த்தி காட்டியுள்ளார். ஒரு நேர்காணலில் தனது மகன் கொக்ககோலா குடிப்பதை தான் விரும்புவதில்லை என்று ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் இது போன்ற செயற்கையான குளிர் பானங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் கற்க ஆர்வமா…? புதிய செயலி அறிமுகம்….!!!

கிரிக்கெட் கற்றுக்கொள்வதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சங்கர் ஆகியோர் சேர்ந்து CRICURU என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கிரிகுரு என்ற கிரிக்கெட் பயிற்சிக்காக ஒரு அனுபவ கற்றல் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளார். CRICURU என்பது இந்தியாவின் முதல் AI- செயல்படுத்தப்பட்ட பயிற்சி வலைத்தளமாகும். இது இளைய வீரர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. இது குறித்து தெரிந்து கொள்ள www.cricuru.com இல் அணுகலாம்.ஒவ்வொரு வீரருக்கான பாடத்திட்டத்தை முன்னாள் இந்திய வீரர் […]

Categories

Tech |