சேலம் மாவட்டம் ஜங்ஷன் ரெட்டி பட்டியில் கீர்த்தி ராஜ்(31) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தனஸ்ரீ (26) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சென்ற 3 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவன் -மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சென்ற ஒருவாரத்திற்கு முன்னதாக தனஸ்ரீ தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று கணவர், மனைவியை சமாதானம்செய்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். […]
