மலாடில் மும்பை கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மலாடை சேர்ந்த கரண் திவாரி(27) என்பவர் மும்பை ரஞ்சி அணியின் வீரர்களுக்கு வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இருந்து வந்துள்ளார். மும்பை சீனியர் அணியில் இடம் பெறுவதற்கு நீண்ட காலமாக முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அணியில்அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கரண் திவாரி சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் வசிக்கும் தனது நண்பரை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். […]
