இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய அணி ‘டார்க் ப்ளூ’ நிற ஜெர்சியை அணிந்து வந்த நிலையில், தற்போது புதிதாக வெளியாகியுள்ள ஜெர்சியில் பெரும்பாலும் ‘லைட் ப்ளூ’ நிறமே இடம்பெற்றுள்ளது. வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இந்தியா இந்த ஜெர்சியை அணிந்து விளையாடும் என்று கூறப்படுகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
