கிராவல் மண்ணை கடத்தியது தொடர்பாக தப்பி சென்ற 3 பேர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்ப்பாடி பகுதியில் கிராவல் மண்ணை கடத்தி செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி நில வருவாய் அதிகாரி முத்துலட்சுமி, வாய்ப்பாடி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் […]
