தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து கிராம பஞ்சாயத்துகள் பொறுப்பேற்றது முதல், கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்க மருப்பதாக குற்றம்சாட்டி ஊராட்சி பஞ்சாயத்து பெண் தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட 32 கிராம பஞ்சாயத்துகளுக்கு தற்போது வரை மாவட்ட ஆட்சியர் நிதி ஏதும் ஒதுக்காததால் 32 ஊராட்சித் தலைவர்கள் நேற்றுமுன்தினம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர் திருமதி […]
