ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி ஓம் சக்தி நகரில் கோவிந்தராசு(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலங்கப்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராசுவின் நெருங்கிய நண்பர் ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரவிக்குமார் தனது கனவில் வந்து கூப்பிடுவதாக கோவிந்தராசு அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறிவந்துள்ளார். நேற்று முன்தினம் வெங்கமேடு மணியக்காரர் தோட்டம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கோவிந்தராசு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து […]
